Published:Updated:

சென்னை: வேலை செய்த வீட்டில் மேஸ்திரி கொலை! - நள்ளிரவில் பயங்கரம்

கொலை
கொலை ( Representational Image )

சென்னையில் புதியதாக வீடு கட்டிவரும் டாக்டர் வீட்டில் கொத்தனராக வேலைப்பார்த்தவர் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடி வெள்ளனூர் கிராமத்தில் டாக்டர் ஒருவர் வீடு கட்டிவருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, சத்தியவேடு சாலை, காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (49) கொத்தனாராக வேலைப்பார்த்து வந்தார். மேஸ்திரியான இவர், கடந்த ஒருசில மாதங்களாக அங்கேகேய தங்கியிருந்தார். மாரிமுத்துவுடன் கட்டட வேலைக்காக பாட்ஷா பாபு, மோகன், மோகனின் தந்தை ஆகியோர் தங்கியிருந்தனர். இந்தநிலையில் 6-ம் தேதி இரவு 7 மணியளவில் மாரிமுத்து உள்பட அவருடன் தங்கியிருந்தவர்கள் மதுஅருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த சூப்பர்வைஸர் அம்பத்தூரைச் சேர்ந்த அஜிஸ் (29), அனைவருக்கும் சம்பள பணம் கொடுத்துவிட்டு சென்றார்.

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து
கொலை செய்யப்பட்ட மாரிமுத்து

பின்னர் இரவு 10 மணியளவில் மாரிமுத்து, சூப்பர்வைஸர் அஜிஸிக்கு போன் செய்தார். அப்போது என்னுடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று மாரிமுத்து கூறியுள்ளார். உடனே அஜிஸ், பணத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது மாரிமுத்து ரத்தக்காயங்களுடன் இறந்துக்கிடந்தார். அதைப்பார்த்து அஜிஸ் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவுடன் தங்கியிருந்தவர்கள் யாரும் அங்கு இல்லை. அதனால் அவர்கள் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது.

கொலை
கொலை
representational image
சென்னை: தாயைக் கத்தியால் குத்திய மகன்! - பாசத்தை மறைத்த சொத்து

இதுகுறித்து ஆவடி டேங்க் பேட்டரி போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் முகம், கற்களால் சிதைக்கப்பட்டுள்ளது. அவர் வைத்திருந்த பணமும் மாயமாகியுள்ளது. அவருடன் தங்கியிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப்பிறகுதான் மாரிமுத்து கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

இந்தச் சம்பவம் ஆவடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு