Published:Updated:

பாலியல் வன்கொடுமை; ரூ.30 லட்சம் பறிப்பு- மேட்ரிமோனியில் அறிமுகமான நபரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கைது ( சித்தரிப்புப் படம் )

திருமண வரன் தேடும் மேட்ரிமோனியல் தளத்தில் நட்பாகப் பேசி, பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

பாலியல் வன்கொடுமை; ரூ.30 லட்சம் பறிப்பு- மேட்ரிமோனியில் அறிமுகமான நபரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

திருமண வரன் தேடும் மேட்ரிமோனியல் தளத்தில் நட்பாகப் பேசி, பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைது ( சித்தரிப்புப் படம் )

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மேட்ரிமோனியல் தளத்தில் திருமணத்துக்காக வரன்தேடி தன் விவரங்களைப் பதிவிட்டிருக்கிறார். இவருக்கு சதுர்வேதி என்ற பெயரில் அதே மேட்ரிமோனியல் தளத்திலிருந்து ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் நட்பாகப் பேசி பழகியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் இருவரும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சதுர்வேதி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், வருடத்துக்கு ரூ.35 லட்சம் சம்பாதிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

செல்போன்
செல்போன்

இதற்கிடையே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது சதுர்வேதி, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைசெய்திருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் சதுர்வேதி தன் அக்காவுக்கு கேன்சர் இருப்பதாகவும், மருத்துவச் செலவுக்குப் பணம் வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி ரூ.30 லட்சம் வரை வாங்கியிருக்கிறார். ஆனால், பணம் பெற்ற பிறகு அந்தப் பெண்ணுடனான தொடர்பை துண்டித்திருக்கிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சதுர்வேதி மீது சந்தேகம் வலுத்திருக்கிறது. உடனே, அவர் பணிபுரிவதாகக் கூறிய நிறுவனத்துக்குச் சென்று விசாரித்தபோது, சதுர்வேதி எனும் பெயரில் யாரும் வேலை செய்யவில்லை என நிறுவனம் மறுத்திருக்கிறது. அதன்பிறகே, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, ``குற்றம்சாட்டப்பட்டவர் காசியாபாத்தின் கோடா பகுதியில், மற்றொரு பெண்ணுடன் தங்கியிருந்ததைக் கண்டறிந்து, கைதுசெய்திருக்கிறோம். அவர் போலியான அடையாளங்களுடன் மேட்ரிமோனியல் தளத்தில் தன் விவரங்களைப் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பேசி பணம் பறித்திருக்கிறார்.

கைது
கைது

மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட ஹோண்டா சிட்டி கார், எல்.சி.டி டிவி, நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளை மீட்டிருக்கிறோம். அவருடன் தங்கியிருக்கும் பெண்ணிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்றார்.