Published:Updated:

புதுக்கோட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை! - மகிளா நீதிமன்றம்

பாக்கியராஜ்
பாக்கியராஜ்

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பூனத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (34). இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்தச் சிறுமி கர்பமானதால், சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் பெற்றோர்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் பாக்கியராஜைக் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இப்போது வயது 23. அவர் குழந்தைக்கு தற்போது 6 வயதாகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் மூன்று ஆண்டுக்கால சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதோடு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை இருப்பதால், அவருக்குத் தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அதிரடித் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு;  இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை! - மகிளா நீதிமன்றம்

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-க்கு 14ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தின் தொடர் அதிரடி தீர்ப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு ஆறுதல் அடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

புதுக்கோட்டை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-க்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை
அடுத்த கட்டுரைக்கு