Published:Updated:

`வீட்டுக்கு வாங்க... நிதி அளிக்கிறேன்’ - என்.ஜி.ஓ பெண்ணை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை ( pixabay )

என்.ஜி.ஓ-க்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லி, போனில் பேசிய பெண்ணை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்தாக, பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் நடவடிக்கை.

`வீட்டுக்கு வாங்க... நிதி அளிக்கிறேன்’ - என்.ஜி.ஓ பெண்ணை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

என்.ஜி.ஓ-க்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லி, போனில் பேசிய பெண்ணை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்தாக, பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் நடவடிக்கை.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( pixabay )

ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் என்.ஜி.ஓ ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரை நிதி வழங்குவதாக வீட்டுக்கு அழைத்து அடித்து, பாலியல் வன்முறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல்
பாலியல்
pixabay

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். அதில், ``ஒருவர் என்ஜிஓ -க்காக நிதி அளிக்கிறேன். என் அலுவலகம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று அலைபேசியில் தொடர்புகொண்டார். நான் அவரின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது, வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளச் சொன்னார். ரோஷன்பூர் காலனிக்கு அருகிலுள்ள சதர் பஜாரில் இருக்கும் அவரின் வீட்டின் முகவரியைத் தந்தார்.

நான் வீட்டுக்குள் சென்றதும் வீட்டுக் கதவை மூடினார். பின்னர் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். இது குறித்து நான் எதிர்க் கேள்வி கேட்டதும், என்னை அடித்துத் துன்புறுத்தியதோடு என் ஆடைகளையும் கிழித்தார். பின்னர், பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்" என அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார்.

பாலியல்
பாலியல்
pixabay

காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்த நபரின் பெயர் ராஜ்குமார். அந்தப் பெண்ணைக் காயப்படுத்தியது (IPC-323), பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது (IPC- 354பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து காவல்துறை துணை உதவி ஆய்வாளர் சுனிதா, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்றும், அதோடு விசாரணை நடந்துவருவதாகவும் கூறியிருக்கிறார்.