Published:Updated:

`திருமணம் தாண்டிய உறவு; பணம் கேட்டு பிளாக்மெயில்’ - கடிதம் எழுதிவிட்டு டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

தன்னுடைய சாவுக்கு போலீஸார் சிலரும் காரணம் எனத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சரவணசெல்வம் எழுதியிருக்கும் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`திருமணம் தாண்டிய உறவு; பணம் கேட்டு பிளாக்மெயில்’ - கடிதம் எழுதிவிட்டு டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

தன்னுடைய சாவுக்கு போலீஸார் சிலரும் காரணம் எனத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சரவணசெல்வம் எழுதியிருக்கும் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணசெல்வம். டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றைவைத்து கார் ஓட்டிவந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். சரவணசெல்வத்துக்கும், டெய்லர் கடை நடத்திவரும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த உறவினால் சரவணசெல்வம் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துவந்திருக்கிறார். இந்நிலையில், தூங்கச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்ற சரவணசெல்வம், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாசப் படங்களைக் காட்டி, தனலட்சுமி மிரட்டியதே சரவணசெல்வத்தின் தற்கொலைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

சரவணசெல்வம் - தனலட்சுமி
சரவணசெல்வம் - தனலட்சுமி

இதற்கிடையே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சரவணசெல்வம் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அதில், `என்னைவாழ விடாமல் பொய் வழக்குகள் போடும் தனலட்சுமி மற்றும் அவர் குடும்பத்தினரே என் மரணத்துக்கு முழுப் பொறுப்பு’ எனக் குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இவர்களுடன் காவல்துறையில் வேலை செய்யும் மூன்று பேருக்கும் தொடர்பிருப்பதாகக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஷயமறிந்த சிலரிடம் பேசினோம். ``2021, டிசம்பம் மாதமே சரவணசெல்வம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். தனலட்சுமியுடன் ஏற்பட்ட தொடர்பும், அதைவைத்து தனலட்சுமியும் அவரின் குடும்பத்தாரும் சேர்ந்து மிரட்டி பிளாக்மெயில் செய்ததுமே, சரவணசெல்வத்தின் தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்தது.

இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட சரவணசெல்வத்தின் மனைவி லாவண்யா, கடந்த ஜூலை மாதம் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருத்தார்.

கடிதம்
கடிதம்

அதில், ‘தனலட்சுமி என்பவருடன் என்னுடைய கணவருக்குப் பழக்கம் இருந்தது. அவர் எனது கணவரை மிரட்டி உறவில் இருந்துவந்ததோடு, தனிமையில் இருந்தபோது ஆபாசப் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கிறார். தனலட்சுமியின் கணவர் ரவி மற்றும் அவரின் குடும்பத்தினரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். அவர்கள் பல கட்டங்களாக என் கணவரிடமிருந்து பல லட்சங்களைப் பறித்துள்ளனர். மேலும், 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு டார்ச்சர் செய்துவந்தனர். இதற்கிடையே, போலீஸ் எனக் கூறிக்கொண்டு சிலரும் என் கணவரை மிரட்டிவருகின்றனர்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பிரச்னையின் தொடர்ச்சியாகத்தான் தற்போது சரவணசெல்வம் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்” என்றனர்.

உயிரிழந்த சரவணசெல்வத்தின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தனலட்சுமி, அவரின் கணவர் ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், சரவணசெல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போலீஸாருக்கும், இந்த விவகாரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.