Published:Updated:

ஜார்க்கண்ட்: கடனுக்கு உணவு கொடுக்க மறுத்த ஸ்வீட் கடை உரிமையாளர் - ஆசிட் வீசி, தாக்குதல் நடத்திய நபர்

ஆசிட் வீச்சு

ஜார்க்கண்டில் ஸ்வீட் கடை உரிமையாளர் கடனுக்கு உணவுப்பொருள் கொடுக்க மறுத்ததால், கோபமடைந்த ஆசாமி ஒருவர் கடைமீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் ஒரு நபர் ஸ்வீட் கடை நடத்திவருகிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடனுக்கு உணவு அளிக்குமாறு கேட்டிருக்கிறார். கடையின் உரிமையாளர், `இங்கு கடனுக்கு உணவு கொடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அது, இருவருக்குமிடையே வாக்குவாதமாக அதிகரித்த நிலையில், கோபமடைந்த மர்ம நபர் தனது வீட்டுக்குச் சென்று, ஆசிட்டுடன் திரும்ப கடைக்கு வந்து, கடைமீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார். இந்தத் தாக்குதலில், ஏழு பேர் காயமடைந்தாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஜேர்முண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட ஹரிபூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

ஸ்வீட் - காரம்
ஸ்வீட் - காரம்

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, ``காயமடைந்த நபர்கள் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக கடை உரிமையாளரின் வாக்குமூலத்தின் பேரில் வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்'' என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!