Published:Updated:

சிறார்வதை செய்து தீயிட்டுக் கொல்ல முயற்சி, சிகிச்சையில் குழந்தை, நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Child Abuse (Representational image)

குழந்தையின் வாயைக் கைகளால் பொத்திக்கொண்டு, சிறுமி எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் தனது பாக்கெட்டில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமியின் உடையில் தீயை பற்ற வைத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

சிறார்வதை செய்து தீயிட்டுக் கொல்ல முயற்சி, சிகிச்சையில் குழந்தை, நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

குழந்தையின் வாயைக் கைகளால் பொத்திக்கொண்டு, சிறுமி எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் தனது பாக்கெட்டில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமியின் உடையில் தீயை பற்ற வைத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

Published:Updated:
Child Abuse (Representational image)

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துருவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டதால், இவரின் மனைவியும் குழந்தைகளை விட்டுவிட்டு வேறு நபரை திருமணம் செய்துகொண்டு கரூரில் குடியிருந்து வருகிறார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்

இந்நிலையில் அக்குழந்தைகளின் பாட்டி, அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தற்காலிகமாக சமையல் வேலை பார்த்து இரு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். மூத்த பேத்தி ஒரு தனியார் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூலை 2-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்பதால், தன் பாட்டியுடன் அங்கன்வாடிக்குச் சென்றுள்ளார் அந்தச் சிறுமி. பாட்டி அங்கன்வாடியில் சமைத்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள மரத்தடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே ஊரைச் சேர்ந்த 19 வயதான விஜயகுமார், தனியாக இருந்த சிறுமியை அழைத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதனால் அவரின் வாயை கைகளால் பொத்திக்கொண்டு, சிறுமி எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் தனது பாக்கெட்டில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமியின் உடையில் தீயை பற்ற வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். தீ உடலில் பரவியதால் சிறுமி அலறிய சத்தம் கேட்டு பாட்டி ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த விஜயகுமார் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

சின்னமனூர் காவல் நிலையம்
சின்னமனூர் காவல் நிலையம்

தன் பேத்தியின் உடலில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி சிறுமியின் உடைகளை அகற்றிவிட்டு, ஆட்டோ பிடித்து, அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். முதலுதவி அளிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளியைப் போலீஸார் தேடினர். அப்போது ஊரின் மயானப்பகுதியில் மறைந்திருந்த விஜயகுமாரைப் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

75 சதவிகித தீக்காயங்களுடன் தற்போது சிகிச்சையில் இருக்கும் சிறுமிக்கு இழப்பீடு கோரி தேனி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யக்கோரி சிறுமியின் பாட்டிக்கு போலீஸார் அறிவுறுத்தினர். அதனடிப்படையில் சிறுமியின் பாட்டி, தன் பேத்திக்கு இழப்பீடு கேட்டு மந்த்தாக்கல் செய்திருந்தார்.

சிறார் வதை (மாதிரி புகைப்படம்)
சிறார் வதை (மாதிரி புகைப்படம்)

மனுவை விசாரித்த முதன்மை மாவட்ட கூடுதல் பொறுப்பு நீதிபதி ஈஸ்வரன், சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். மேலும் அதில் ஒரு லட்ச ரூபாயை ஒரு மாதத்துக்கு மருத்துவச் செலவுக்காகவும், மீதத் தொகையை 3 மாதங்களுக்குள் பாட்டியின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சின்னமன்னூர் போலீஸாரிடம் விசாரித்தோம். ``ஆறாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள விஜயகுமார் கிடைக்கும் கூலி வேலை பார்த்துக்கொண்டு மது, கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளார். அவர் எப்போதும் குடிபோதையில் அங்கன்வாடியை ஒட்டியப் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பது வழக்கம்.

பாதிக்கப்பட்ட சிறுமி
பாதிக்கப்பட்ட சிறுமி

ஜூலை 2-ம் தேதி 12 மணிக்கு சிறுமிக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்ற விஜயகுமார், அதே பகுதியில் உள்ள மயானப்பகுதியில் பதுங்கியிருந்தார். ஊரில் விசாரித்தபோது அவன் வேறெங்கும் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை எனக் கருதி ஊருக்குள் தேடினோம். அப்போதுதான் ஊரின் ஒதுக்குப்புறமான மயானப்பகுதியில் இருந்ததைக் கண்டறித்து மதியம் 2 மணிக்குள் கைது செய்தோம்’’ என்றனர்.