Published:Updated:

`அன்று பெட்ரூம் ஜன்னல்... இன்று பெண்களின் ஆடை, செருப்பு!’ - சைக்கோ திருடனால் பதறும் கோவை

சைக்கோ திருடன்
சைக்கோ திருடன்

ஏற்கெனவே இதே பகுதியில் வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டுமே குறிவைத்துப் பார்க்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் பகுதியில் உள்ள மீனாட்சி கார்டனில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் `சைக்கோ திருடன்’ குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

`அன்று பெட்ரூம் ஜன்னல்... இன்று பெண்களின் ஆடை, செருப்பு!’ - சைக்கோ திருடனால் பதறும் கோவை

கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் எல்லையில் உள்ள மீனாட்சி கார்டனில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளில் சமீபகாலமாக காலணிகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் மர்மமாக திருட்டுப் போய் வந்தது.

இப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பல்வேறு குடியிருப்பில் இருந்து ஓரே நேரத்தில் உள்ளாடைகளும் செருப்புகளும் காணாமல் போக, ஆளில்லாத ஒரு வீட்டில் இந்தப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

`அன்று பெட்ரூம் ஜன்னல்... இன்று பெண்களின் ஆடை, செருப்பு!’ - சைக்கோ திருடனால் பதறும் கோவை

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மீண்டும் இதுபோன்று பெண்களின் உள்ளாடைகள், செருப்பு போன்றவை திருடுபோனது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திருடன் வந்து திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

` பெட்ரூம் ஜன்னல்தான் டார்கெட்!' -சிசிடிவி-யில் சிக்கிய மர்ம நபரால் மிரளும் கோவை

ஏற்கெனவே இதே பகுதியில் வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டுமே குறிவைத்துப் பார்க்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த நபரும் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில், இதுவும் அதே நபரின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பின் செல்ல