Published:Updated:

7 ஆண்டுக்கால பின்தொடரல்... இறுதியில் கொலை மிரட்டல் - கத்ரீனாவை மனைவி எனக் கூறிய இளைஞர் கைது!

கத்ரீனாவை மனைவி எனக் கூறிய இளைஞர் கைது

நடிகை கத்ரீனா கைஃப்புக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர், அவரைக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்திருக்கிறது.

7 ஆண்டுக்கால பின்தொடரல்... இறுதியில் கொலை மிரட்டல் - கத்ரீனாவை மனைவி எனக் கூறிய இளைஞர் கைது!

நடிகை கத்ரீனா கைஃப்புக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபர், அவரைக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
கத்ரீனாவை மனைவி எனக் கூறிய இளைஞர் கைது

நடிகை கத்ரீனா கைஃப், அவர் கணவர் விக்கி கெளஷலுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மன்வேந்திர சிங் (30) என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம் இந்தக் கொலை மிரட்டலை விடுத்துவந்த அந்த நபர், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவருகிறார். கத்ரீனாவின் கணவர் விக்கி கொடுத்த புகாரில் கைதுசெய்யப்பட்ட சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய போலீஸார், ``நடிகை கத்ரீனா கைஃப் சினிமாவில் நுழைந்ததிலிருந்தே அவரை சிங் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். அதோடு கத்ரீனாவுடன் தான் இருக்கும் வகையில் போலிப் புகைப்படங்களை உருவாக்கி அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தார்.

விக்கி-கத்ரீனா கைஃப் ஜோடி
விக்கி-கத்ரீனா கைஃப் ஜோடி

கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி கத்ரீனா கைஃப் திருமணமானவுடன் பொறாமையில் அதே மாதத்தில் 13-ம் தேதி தனக்கும் கத்ரீனாவுக்கும் திருமணம் என்று கூறி, சிங் திருமண அழைப்பிதழை சமூக வலைதளத்தில் வெளியிட்டதோடு, இருவரும் திருமணம் செய்துகொண்டது போன்ற போலி புகைப்படங்களையும் வெளியிட்டார். புகைப்படங்களில் கத்ரீனா கைஃப்பை தன் மனைவி என்றே சமூக வலைதளங்களில் குறிப்பிட ஆரம்பித்தார். காதலர் தினத்தன்றும் கத்ரீனா கைஃப்புடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை கத்ரீனா, விக்கி இருவருக்கும் அனுப்பியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவருடன் கத்ரீனா கைஃப்
கணவருடன் கத்ரீனா கைஃப்

சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் சிங், விக்கிக்கு அனுப்பியிருக்கும் செய்தியில், தான் கத்ரீனாவைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அவரிடமிருந்து விலகியிருக்கும்படியும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். விக்கி-கத்ரீனா கைஃப் திருமணத்துக்குப் பிறகு கத்ரீனாவின் திருமணம் போலியானது என்றும், ஏழு ஆண்டு உறவை மறைக்க இப்படிச் செய்திருக்கிறார்கள் என்றும் இன்ஸ்டாகிராமில் சிங் ஒரு செய்தி வெளியிட்டார். சிங் ஒரு சைக்கோ. அவர் கத்ரீனாமீது பைத்தியமாக இருக்கிறார். அவரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். சிங், நடிகை கத்ரீனா கைஃப் வீட்டுக்கு அருகில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.