Published:Updated:

மாற்றுச் சமூக இளைஞரைக் காதலித்ததால் ஆத்திரம்; மகளைக் கொன்று உடலுக்குத் தீ வைத்த கொடூரத் தந்தை கைது!

க்ரைம் - கொலை

மாற்றுச் சமூக இளைஞரைக் காதலித்ததால் ஆத்திரத்தில் தந்தை ஒருவர் தன் மகளைக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாற்றுச் சமூக இளைஞரைக் காதலித்ததால் ஆத்திரம்; மகளைக் கொன்று உடலுக்குத் தீ வைத்த கொடூரத் தந்தை கைது!

மாற்றுச் சமூக இளைஞரைக் காதலித்ததால் ஆத்திரத்தில் தந்தை ஒருவர் தன் மகளைக் கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
க்ரைம் - கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லியிலுள்ள கிராமத்தில் பிரமோத் குமார் என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்துவந்திருக்கிறார். இவருடைய 18 வயது மகள், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்துவந்திருக்கிறார். தன் மகள் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை விரும்புவது பிடிக்காமல் தந்தை பிரமோத் குமார், அவரைப் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால், பிரமோத்தின் மகள் தொடர்ந்து அந்த இளைஞரிடம் பழகிவந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரமோத்தின் மகள் அந்த இளைஞருடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். குடும்பத்தாரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு நாள் கழித்து அந்தப் பெண் தனது வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பிரமோத்குமார் தன் மகளைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்

அதன்படி, தன் மகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்ற பிரமோத், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார். பின்னர் வயல்வெளிப் பகுதியில்வைத்து அவர் உடலுக்குத் தீ வைத்தார். மகளைக் கொலைசெய்தது யாருக்கும் தெரியக் கூடாது என்பதால், அவரை உறவினர் வீட்டில் தங்கவைத்திருப்பதாகக் குடும்பத்தினரை நம்பவைத்திருக்கிறார்.

கைது
கைது

இந்த நிலையில், வயல்வெளியில் மனித உடல் ஒன்று எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சாம்பலிலிருந்து எலும்புகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தான் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். அதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.