Published:Updated:

மதுபோதையில் தகராறு... சண்டையில் விரலை இழந்த கோவை நபர்!

சண்டை
சண்டை

கோவையில், மதுபோதையில் சண்டையிட்டதில் ஒருவரின் விரலை, மற்றொருவர் கடித்துத் துப்பிய வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவையில் புலியகுளம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மது போதையில் இரு குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரமாக இருவரும் சண்டையிட்ட நிலையில் அதில் ஒருவர் மற்றொருவரின் விரலைக் கடித்து துப்பினார். விரல் பகுதி மட்டும் தனியாக விழுந்த நிலையில் அங்கிருந்த பொது மக்கள் அவர்கள் இருவரையும் விரட்டி விட்டனர். இந்த சம்பவத்தை அந்தப் பகுதியில் இருந்த நபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சண்டை
சண்டை

மதுபோதையில் சாலையில் இருவரும் மாறி மாறி அடுத்துக் கொண்டும், உருண்டு கொண்டும் நீண்ட நேரம் சண்டை போட்டு இருந்துள்ளனர். பலரும் கண்டுகொள்ளாமல் இருதுள்ளனர். மண்டையில் மாத்தி மாத்தி கல்லை வைத்து கொட்டிக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஒருபடியாக உருண்டு உருண்டு கடையினுள் வந்துள்ளனர். அதன்பிறகு கடையில் இருந்தவர்கள் பிரித்துவிட்டுள்ளனர். அப்போது சண்டை போட்டதில் ஒருவர் ஆள் காட்டி விரலை கடித்து துப்பியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு