Published:Updated:

`பெற்றோருக்கு அவள் கெட்டிக்காரி; பாசத்துக்கு ஏங்கினேன்'- தங்கையைக் கொன்று உடலை புதரில் வீசிய அண்ணன்

ஆத்திரத்தில் இருந்த சாம்சன் இதுதொடர்பாக 8-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஃபியோனாவிடம் சண்டையிட்டுள்ளார்.

ஃபியோனா - சாம்சன்
ஃபியோனா - சாம்சன்

கர்நாடக மாநிலம் முடிப்புப் பகுதியைச் சேர்ந்த ஃபியோனா ஸ்வீடல் என்ற 16 வயதுச் சிறுமி கடந்த 8-ம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். ஃபியோனா தாய் ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். சம்பவத்தன்று ஃபியோனாவின் தந்தை பிரான்சிஸ் காலை 11 மணி அளவில் கடைக்குச் சென்றுவிட அண்ணன் சாம்சன் உடன் வீட்டில் இருந்துள்ளார் ஃபியோனா. மீண்டும் 1.30 மணி அளவில் வீடு திரும்பிய பிரான்சிஸ், ஃபியோனா வீட்டில் இல்லாததை அறிந்து அவர்குறித்து சாம்சனிடம் கேட்டுள்ளார். அதற்கு `ஃபியோனா மங்களூரு சென்றுள்ளார்" எனக் கூறியுள்ளார். நீண்ட நேரம் அவரின் வருகைக்குக் காத்திருந்த பிரான்சிஸ், பின்னர் போன் செய்து பார்த்துள்ளார். போன் ஸ்விட்ச் ஆஃப் என வரவே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஃபியோனா
ஃபியோனா

இதன்பின்தான் ஃபியோனாவைக் காணவில்லை எனக் கூறி போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரின் போன் லொக்கேஷனை சோதித்துப் பார்த்துள்ளனர். அதில் கடைசியாக ஃபியோனாவின் போன் இருந்த இடம் முடிப்புப் பகுதியைக் காண்பித்தது. பின்னர், சாம்சனிடம் இரண்டாவது முறையாக சில தினங்களுக்கு முன் விசாரணை நடத்திய போலீஸார், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக சாம்சனை கைது செய்துள்ளனர். விசாரணையில் தன் தங்கைக்கு என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளார் சாம்சன்.

Vikatan

இன்ஜினீயரிங் படித்துவந்துள்ள சாம்சனுக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கத்தின் காரணமாக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த 6-ம் தேதி சாம்சன் வைத்திருந்த மொபைல் போனை பிடுங்கி ஃபியோனாவுக்குக் கொடுத்துள்ளார் பிரான்சிஸ். இதனால் ஆத்திரத்தில் இருந்த சாம்சன் இதுதொடர்பாக 8-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஃபியோனாவிடம் சண்டையிட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த சுத்தியலை வைத்து அடித்து ஃபியோனாவைக் கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக உடலை வீட்டின் பின்புறம் இருந்த புதரில் வீசியுள்ளார்.

சாம்சன்
சாம்சன்

சாம்சன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவரை அழைத்துக்கொண்டு ஃபியோனா உடல் வீசப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரின் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. இந்தக் கொலையில் சாம்சன் பிடிபட்டது எப்படி என்று செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் ஹர்ஷா, ``இதுபோன்று காணாமல் போன வழக்குகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பதற்றம் தெரியும். ஆனால், சாம்சனிடம் அதுபோன்ற எந்தப் பதற்றமும் தெரியவில்லை. கூடவே விசாரணையிலும் தெளிவான பதில் கொடுக்கவில்லை என்பதால் ஆரம்பம் முதலே அவர்மீது சந்தேகம் அடைந்தோம். பின்னர் அவர் குறித்த சந்தேகம் வலுப்பெறவே அவரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தினோம்.

`அவனிடம் பழகாதே; அப்பாவிடம் சொல்லிவிடுவேன்!'- காதலனுடன் சேர்ந்து அம்மாவைக் கொன்ற மகள்

குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாம்சன். கொலைக்குக் காரணமாக இருந்தது உடன்பிறப்புக்களிடையே பொறாமைதான். தங்கையிடம் மட்டும் பெற்றோர்கள் அதிக பாசம் காண்பிப்பதாக சாம்சன் நினைத்துக்கொண்டிருந்துள்ளார். இந்த ஆத்திரத்தில்தான் அவரைக் கொலை செய்துள்ளார். அதுவும் மனிதத்தன்மையற்ற முறையில் இந்தக் கொலையை செய்துள்ளார். சுத்தி கொண்டு தாக்கியதால் அதிக ரத்தம் வெளியேறி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். கொலைக்குப் பிறகு, தனக்கு கடுமையான தலைவலி இருப்பதாகக் கூறி சாம்சன் இரண்டு நாள்கள் வீட்டில் இல்லை. குற்றம் தொடர்பாக அனைத்து ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது" எனக் கூறியவர், விசாரணையில் சாம்சன் கூறிய தகவல்களையும் சொல்லியுள்ளார்.

சாம்சன்
சாம்சன்

அதில் `கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு, என் பெற்றோர் என்னை நன்றாக நடத்தவில்லை. அவர்கள் எப்போதும் ஃபியோனாவுக்கு ஆதரவாக இருந்தனர். என்னிடம் பாசம் காட்டவில்லை. நான் என் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தேன். காலை உணவைக்கூட என் பெற்றோர் முதலில் என் சகோதரிக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவள் படிப்பில் கெட்டிக்காரி என்பதால் பெற்றோர் எப்போதும் அவளுக்கு ஆதரவாக இருந்தார்கள். கடைசியில் அவர்கள் எனது மொபைல் போனையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தார்கள். இதில் ஆத்திரம் ஏற்படவே வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கொலை செய்துவிட்டேன்' என சாம்சன் கூறியதாக கமிஷனர் ஹர்ஷா தெரிவித்துள்ளார்.

news & photo credit - mangalorean.com

3 ஆண்டு தேடுதல்.. ஒருவழிப்பாதை குகை.. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டது எப்படி?