Published:Updated:

மார்த்தாண்டம்:`பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் விற்பனை?’ - சர்ச்சையில் சிக்கிய போலீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் உள்ள பைக்குகள்
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் உள்ள பைக்குகள்

``ஆவணங்கள் சரிபார்க்கப்படாமல் பல வாகனங்கள் காவல் நிலையத்தைவிட்டு வெளியே சென்றுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது’’ என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் பைக்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் பைக்குகள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பைக்குகள் இங்கு ஒன்றாகக் குவிந்துகிடக்கின்றன. வருடக்கணக்காக வழக்குகள் நடப்பதால், சிதிலமடைந்த பைக்குகளும் இவற்றில் உள்ளன.

இந்தநிலையில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாகவும், சில போலீஸ் அதிகாரிகளே புரோக்கர்கள் உதவியுடன் பைக்குகளை விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்தத் தகவல் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் எஸ்.பி பத்ரிநாராயணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன்
மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன்

அப்போது, வாகன வழக்குகள் தொடர்பான கோப்புகளை எஸ்.பி ஆய்வு செய்தார். அதில், பல இருசக்கர வாகனங்கள் மாயமானது தெரியவந்தது. இது சம்பந்தமாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஆதிலிங்க போஸ், உதவிக் காவல் ஆய்வாளர் சுரேஷ் உட்பட மூன்று காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர்: `சந்துக்கடையில் சரக்கு விற்பனை' - அப்பாவியைத் தாக்கியதா போலீஸ்... என்ன நடந்தது?

மேலும், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஆய்வு செய்யவும். காணாமல்போன பைக்குகள் குறித்து விசாரணை நடத்தவும் தக்கலை சரக டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் வாகனங்களையும் கோப்புகளையும் கணக்கிடும் பணியைச் செய்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எட்டு பைக்குகள் காணாமல்போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 பைக்குகள் வரை காணாமல்போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

போலீஸாரால் பரிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
போலீஸாரால் பரிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஆவணங்கள் சரிபார்க்கப்படாமல், பல வாகனங்கள் காவல் நிலையத்தைவிட்டு வெளியே சென்றுள்ளன. இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது’’ என்றார். மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பைக்குகள் போலீஸ் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு