Published:Updated:

20 கிலோ தங்கம்: துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்! - போலீஸ் விசாரணை

கொள்ளை

துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி சுமார் ரூ.12.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும், ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

20 கிலோ தங்கம்: துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்! - போலீஸ் விசாரணை

துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி சுமார் ரூ.12.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும், ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
கொள்ளை

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கிளை இயங்கிவருகிறது. இந்த நிறுவன அலுவலகத்திலிருந்து, ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், உதய்பூரின் பிரதாப் நகரில் உள்ள மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் அலுவலகத்தில், நேற்று காலை 9:22 மணியளவில், முகமூடிகள் மற்றும் ஹெல்மெட் அணிந்த ஆயுதமேந்திய ஐந்து பேர்கொண்ட கும்பல் நுழைந்தது.

அவர்கள் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி சுமார் ரூ.12.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும், ரொக்கத்தையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், ``பிரதாப் நகரில் உள்ள மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் கொள்ளையர்கள் நுழைந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் புகாரளிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் ஐந்து பேரும் 20 கிலோ தங்கம், மற்றும் ரொக்கத்துடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

முகமூடி கொள்ளையர்கள்!
முகமூடி கொள்ளையர்கள்!
சித்திரிப்பு படம்

இது தொடர்பாக அலுவலக ஊழியர்களிடம் விசாரித்ததில், துர்கேஷ் சர்மா என்ற ஊழியர், `காலை 9:20 மணியளவில் முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் நுழைந்த ஐந்து பேர், துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி ஊழியர்களையெல்லாம் சுவரை நோக்கித் தள்ளிக் கைகளை கட்டிவிட்டனர். லாக்கரின் சாவியைப் பெறுவதற்காக ஐந்து ஊழியர்களில் இருவரை கொள்ளையர்கள் தாக்கி, சாவியைப் பெற்று, தங்கள் பைகளில் பணம் மற்றும் நகைகளை நிரப்பிவிட்டு காலை 9:40 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுவிட்டனர்' எனத் தெரிவித்திருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

அதன் பிறகே நாங்கள் தகவலறிந்து அங்கு சென்றோம். தற்போது சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம்" எனத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.