Election bannerElection banner
Published:Updated:

கரூர்: தடையை மீறி சேவல் சண்டை; 18 பைக்குகள் பறிமுதல்! - 5 பேரை வளைத்த போலீஸ்

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்றில் சிலர் பணம்வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்குத் தகவல் வந்திருக்கிறது.

தடையை மீறி கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்திய ஐந்து நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதோடு, 18 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடியவர்களைத் தேடிவருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம்
நா.ராஜமுருகன்
கரூர்: `ஆளில்லாத அறையில் கணினி இயங்கியது எப்படி?!'  - செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில், சேவல்கட்டு என்கிற சேவல் சண்டை நடத்த மாவட்டக் காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனால், அந்தத் தடையை மீறி, பலரும் அவ்வப்போது சேவல் சண்டை நடத்திவருகிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்றில் சிலர் பணம்வைத்துச் சூதாடி, சேவல் சண்டை நடத்துவதாக காவல்துறையினருக்குத் தகவல் வந்திருக்கிறது.

அப்படி வந்த தகவலின்பேரில், மாயனூர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு சேவல் சண்டை நடத்தியவர்கள், போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, போலீஸார் அங்கிருந்த 18 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்களைப் பறிமுதல் செய்தனர். அதோடு, தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதாக சித்தலவாய் கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், பொய்கை புத்தூரைச் சேர்ந்த மருதுபாண்டியன், கரூர் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மலையப்பன், வளையபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், குளித்தலையைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து பேரை மாயனூர் காவல் நிலைய போலீஸார் கைதுசெய்தனர். அப்படிக் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரையும் கிருஷ்ணராயபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர். சேவல் சண்டை நடத்தி இளைஞர்கள் கைதான சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு