Published:Updated:

மயிலாடுதுறை: வன்னியர் சங்க முன்னாள் நகரச் செயலாளர் கொலை; பதற்றம் - போலீஸார் குவிப்பு

கண்ணன்

மயிலாடுதுறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்று வெளியில் வந்த முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளர் கண்ணன், முன்விரோதம் காரணமாக நேற்றிரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை: வன்னியர் சங்க முன்னாள் நகரச் செயலாளர் கொலை; பதற்றம் - போலீஸார் குவிப்பு

மயிலாடுதுறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்று வெளியில் வந்த முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளர் கண்ணன், முன்விரோதம் காரணமாக நேற்றிரவு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கண்ணன்

மயிலாடுதுறை கொத்தத்தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் கண்ணன் (வயது 31). ஆம்புலன்ஸ் வைத்திருக்கிறார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும், கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்டபோது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கண்ணன், கதிரவனைத்  தாக்கியிருக்கிறார்.

முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளர் கொலை
முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளர் கொலை

இது குறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கண்ணனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். கண்ணன்மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருப்பதால் கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலையாகி ஊருக்கு வந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்  நேற்றிரவு (17.08.2022)  கண்ணன், தன் நண்பர்கள்   ரஞ்சித், திவாகர் ஆகியோருடன் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கடைவீதியில் பீடா வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது புதிய பேருந்து நிலையம் அருகே வழிமறித்த  கலைஞர் காலனியைச் சேர்ந்த அஜித், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதனால் பயந்து கண்ணனுடன் வந்த ரஞ்சித், திவாகர் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். அதனையடுத்து அந்தக் கும்பல் மறைத்துவைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தப்பிக்க முயன்ற கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்புப் பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கிற. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.,

கொலை
கொலை

அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்கு பதிந்து அதில் ஈடுபட்ட அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பலைத் தேடிவருகின்றனர். இந்நிலையில் கொலை  நடந்தபோது  கண்ணனுடன் வந்த திவாகரை  போலீஸார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு மேலும் மோதல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.