Published:Updated:

``மணல் கொள்ளை பற்றி வாட்ஸ்அப்பில் தகவல் கொடுங்கள்" - மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர்

மயிலாடுதுறையில் மணல் கொள்ளையர்மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள்மீது வழக்குகள் பதிவு செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்  அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மணல் கொள்ளையர் மீது குண்டர் சட்டம் பாயும்
மணல் கொள்ளையர் மீது குண்டர் சட்டம் பாயும்

இது பற்றி மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரிடம் பேசினோம்.

``தற்போது மொத்தம் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வழக்கு சொத்தாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 154 நான்கு சக்கர வாகனங்களும், 77 பொக்கலைன் இயந்திரங்களும், மாட்டு வண்டிகளும் அடங்கும். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.  மேலும் ஒரு நபர் மீது இது போன்ற தொடர் மணல் திருட்டுப் புகார் வரும் பட்சத்தில் அவர்மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் தங்கள் ஊர்களில் மணல் திருட்டு நடைபெறுவது பற்றிய தகவல்களை 9442626792 என்ற எண்ணுக்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்  எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள.

`கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை

அவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது மணல் திருட்டு வாகனங்களைக் கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படவிருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு