Published:Updated:

சாக்லேட்டில் போதைப்பொருள்: டெலிவரிக்கு ஊபர், ரேபிடோ; பலே திட்டத்துடன் விற்பனை செய்த மாணவர் கைது!

சாக்லேட் ( மாதிரி படம் )

ஹைதராபாத்தில், போதைப்பொருள் கலந்த சாக்லேட்டுகளை தயாரித்து விற்ற 22 வயது மாணவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சாக்லேட்டில் போதைப்பொருள்: டெலிவரிக்கு ஊபர், ரேபிடோ; பலே திட்டத்துடன் விற்பனை செய்த மாணவர் கைது!

ஹைதராபாத்தில், போதைப்பொருள் கலந்த சாக்லேட்டுகளை தயாரித்து விற்ற 22 வயது மாணவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சாக்லேட் ( மாதிரி படம் )

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் குமார் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் MBA படிப்பை தொடரவிருக்கிறார். இந்த நிலையில், ரா (Raw) சாக்லேட்டுடன் ஹாஷ் ஆயிலை கலந்து சாக்லேட் பார்களை தயாரித்து, அவற்றை சமூக வலைதளங்கள் மூலம் சந்தைப்படுத்தியிருக்கிறார் குமார். இந்த நிலையில், போலீஸாருக்கு அவர் சாக்லேட்டில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, குமாரை போலீஸார் கண்காணித்து ஆதாரங்களுடன் கைதுசெய்தனர்.

கைது
கைது

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், "குற்றம்சாட்டப்பட்டுள்ள குமார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர், 4 கிலோ ரா சாக்லேட்டை 40 கிராம் ஹாஷ் ஆயிலுடன் கலந்து 60 சாக்லேட் பார்கள் செய்து ரூ 5,000 முதல் ரூ 10,000 வரை விற்பனை செய்திருக்கிறார். அவர் சமூக ஊடகங்களான Whatsapp, Instagram மற்றும் Snapchat மூலம் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வார், `edibles are available' (உண்ணக்கூடிய பொருட்கள் உள்ளன) அதுதான், இந்த போதை பொருளுக்கான குறியீட்டு வார்த்தை. 18 - 22 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் அவரது வாடிக்கையாளர்களாக இருந்தனர்.

காவல்துறை
காவல்துறை

மேலும், அதை டெலிவரி செய்ய Uber, Rapido போன்ற நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தியிருக்கிறார். அந்த சாக்லேட் பார்களை உட்கொள்பவர்கள் 6 - 7 மணி நேரம் போதையில் இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும், மொபைல் போனில் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.