Published:Updated:

சேலம்: மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸார் விசாரணை

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

நிர்மல் குமார் தினமும் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று காலையிலிருந்து நிர்மல் குமாருக்கு செல்போனில் அவரின் பெற்றோர் தொடர்புகொண்டும் எடுக்கவில்லை.

சேலம்: மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸார் விசாரணை

நிர்மல் குமார் தினமும் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று காலையிலிருந்து நிர்மல் குமாருக்கு செல்போனில் அவரின் பெற்றோர் தொடர்புகொண்டும் எடுக்கவில்லை.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சேலம், அரியானூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டிப் பகுதியைச் சேர்ந்த அருள்மொழி குமார் என்பவருடைய மகன் நிர்மல் குமார் முதுநிலை பிசியோதெரபி படித்துவந்தார். தினமும் சொந்த ஊருக்குச் சென்று வர முடியாத நிலை என்பதால் கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கிப் படித்துவந்திருக்கிறார். இந்நிலையில் நிர்மல் குமார் தினமும் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், நேற்று காலையிலிருந்து நிர்மல் குமாருக்கு செல்போனில் அவரின் பெற்றோர் தொடர்புகொண்டும் எடுக்கவில்லை. இதுச்குறித்து நிர்மல் குமாரின் நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர்களுக்கும் ஒன்றும் தெரியாததால், உடனே நிர்மல் குமார் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று பார்க்கச் சொல்லியுள்ளனர்.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

அதன் மூலம் நிர்மல் குமார் தங்கியிருந்த அறைக்கு நண்பர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அறைக்கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் திறக்குமாறு வெகுநேரமாக நண்பர்கள் கதவைத் தட்டினர். ஆனால் நிர்மல் குமார் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நிர்மல் குமார் தூக்கிட்டு இறந்துகிடந்தார்.

இது குறித்து நிர்மல் குமாரின் பெற்றோர்களுக்குத் தகவல் அளித்ததுடன், ஆட்டையாம்பட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், நிர்மல் குமார் மரணத்தில் தற்கொலைக்கான காரணம் வேறு ஏதும் இருக்கிறதா அல்லது ராகிங் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டாரா என்று விசாரணை செய்துவருகின்றனர்.