Published:Updated:

சட்டவிரோதக் கடத்தல்; ரகசியத் தகவல்; 700 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த போலீஸார்!

மீஞ்சூரில் சரக்கு வாகனம் மூலம் சென்னைக்குக் கடத்தப்பட்ட 700 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் வெளிமாநிலங்களிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாகக் கொண்டுவரப்பட்டு சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், கடத்தல்காரர்கள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைக் கிராமங்கள் வழியாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எனக் கொண்டுவந்து பின்னர், அங்கிருந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்துவருகின்றனர். அண்மையில், தமிழக அரசு குட்கா, போதை வஸ்துகள் ஆகியவை விற்பனை தொடர்பான சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீஞ்சூர் வழியாகத் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப்பொருள்கள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மீஞ்சூர் போலீஸார் நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்: `6 மாதங்களில் 11,389 கிலோ பறிமுதல்; தகவலுக்கு சன்மானம்' - குட்கா தடுப்பு நடவடிக்கை
குட்கா
குட்கா

அப்போது மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். வாகனத்திலிருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, போலீஸார் சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் வெளி மாநிலங்களிலிருந்து மீஞ்சூர் கடத்திவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, குட்கா பொருள்களுடன் சரக்கு வாகனத்தைக் கைப்பற்றிய போலீஸார், வாகனத்தை ஓட்டிவந்த சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த செய்யது (48), உடனிருந்த வெங்கடரெட்டி (45) இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு