Published:Updated:

மீரா மிதுன் கேரளாவில் கைது: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அதிரடி!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மீரா மிதுன் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று அவர் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகை மீரா மிதுன் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்துப் பேசியது சர்ச்சையானது.

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

மீரா மிதுனின் அந்தப் பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவருக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உட்பட பல்வேறு நபர்கள் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்களை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல்துறையினர் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

சாதி, மதம் குறித்துப் பேசி கலகத்தை உண்டாக்குதல், கலகம் செய்யத் தூண்டுவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தலைமறைவாகியிருந்தார் மீரா மிதுன். அதோடு, ``என்னை தாராளமாகக் கைதுசெய்துகொள்ளுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னைக் கைதுசெய்வது நடக்காது. அப்படி நடந்தால், அது கனவில் மட்டுமே நடக்கும். பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை. எனக்குத் தொந்தரவு கொடுத்தவர்களை மட்டுமே தவறானவர்கள் என்று கூறினேன்" என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

இந்தநிலையில் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனின் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு சென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல்துறையினர் மீரா மிதுனைக் கைதுசெய்தனர். கைது செய்யும்போதுகூட `அதை வீடியோ எடுத்து என்னைத் தொட்டால் என்னை நானே கத்தியால் குத்திக்கொள்வேன்’ என்று அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அவரை கேரளாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும் வேலையில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

நடிகை மீரா மிதுனுக்கு பா.ம.க கண்டனம்; திருமாவின் ரியாக்‌ஷன் என்ன?

சென்னைக்கு வந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அவருக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு