Published:Updated:

அரியலூர்: கிராவல் மணலுக்குப் பதில் ஆற்று மணல் அள்ளும் கும்பல்? - அதிகாரிகளிடம் மக்கள் புகார்!

கோவிலூரில் விதிமுறையை மீறி எடுக்கப்படும் கிராவல் மண்

இரவு நேரங்களில் கிராவல் மணல் எடுக்கிறோம் என்கிற பெயரில் ஆற்றுமணலை லாரி லாரியாக கடத்துகிறார்கள். இதுவும் அதிகாரிகளின் துணையுடன் நடப்பதாகக் கூறி கிராவல் மண் எடுக்கும் கும்பலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அரியலூர் கிராம மக்கள்.

கோவிலூர் கிராமத்தில் எடுக்கப்படும் கிராவல் மண்
கோவிலூர் கிராமத்தில் எடுக்கப்படும் கிராவல் மண்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோவிலூர் என்கிற கிராமத்தில்தான் கிராவல் மண் எடுப்பதில் கூட்டுக்கொள்ளை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மேனேஜர் ராஜ்குமார் என்பவரின் தன் நண்பர்கள் பெயரில், அவரின் சொந்த நிலத்தில் கிராவல் மண் எடுப்பதாக அனுமதி வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த நிலத்தில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக மணல் எடுக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரக்கணக்கான வண்டிகள் கிராவல் மண்ணை எடுத்துச்செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாய நிலத்துக்கு கிராவல் மண் எடுக்க அனுமதிக்காத அதிகாரிகள், இந்த கொள்ளையடிக்கும் கும்பலுக்கு மட்டும் எப்படி அனுமதிக் கொடுக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் கிராமமக்கள். இந்த கும்பலுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவும், ஆட்சியரிடம் புகார் கொடுக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

கோவிலூரில் செயல்படும்
கோவிலூரில் செயல்படும்

போராட்டத்துக்குத் தயாராகும் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``கனிம வளத்தைச் சுரண்டுவது தாயின் கருவை அறுப்பதற்குச் சமம். கிராவல் மண் என்ற பெயரில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள். இதற்கு அதிகாரிகளும் துணை போவதுதான் வேதனையாக இருக்கிறது. திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வேலை வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது மெகா ப்ராஜெட், அதனால் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்க கிராவல் மண் அதிக அளவில் தேவைப்படுவதால் இங்கிருந்து மண்ணை எடுத்துச்செல்கிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டன் அளவுக்கு கிராவல் மண் எடுத்துச் செல்கிறார்கள்.

தங்க சண்முகசுந்தரம்
தங்க சண்முகசுந்தரம்

அரசு உத்தரவுப்படி மூன்று அடிக்கு மேல் மணல் எடுக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இங்குக் குறைந்தது ஏழு அடி ஆழத்துக்கு மண் எடுக்கிறார்கள். அதேபோல் பட்டா இடத்தை தாண்டியும் அரசுக்குச் சொந்தமான இடத்திலும் எடுக்கிறார்கள் என்பதுதான் வேதனை. இது ஒருபுறம் இருக்கக் கொள்ளிடம் ஆறு பக்கத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்று மணலை வண்டிகளில் நிரப்பி அதன் மீது கிராவல் மண்ணைப் போட்டுக் கொண்டு லோடு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது அத்தனையும் அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் நன்கு தெரியும். இவர்கள் செய்யும் அட்டூழியங்களை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் தெரிவித்தால்... அடுத்த நிமிடமே மேனேஜர் ராஜ்குமாரின் உதவியாளர் தஞ்சாவூரைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் சம்மந்தப்பட்டவரின் போனில் வந்து பேரம் பேசுவார்.

கலெக்டர் உத்தரவையும் மீறி தடையில்லாமல் நடக்கும் கிராவல் மண் கடத்தல்!
கலெக்டர் உத்தரவையும் மீறி தடையில்லாமல் நடக்கும் கிராவல் மண் கடத்தல்!

அது மடியாத பட்சத்தில் பிரபல டிரான்ஸ்போர்ட் குரூப் ஒன்றில் உள்ள சிலர் மிரட்டும் தொணியில் பேசுவதோடு, `அதிகாரிகள் சப்போர்ட்டோடுதான் மண்ணை எடுக்கிறோம். எங்களை உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது' என்று தெனாவெட்டா சொல்லிட்டு, தொடர்ந்து மண்ணை எடுக்கிறார்கள். அதனால்தான், அதிகாரிகள் சப்போர்ட்டோடு முறைகேடாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறோம்" என்றார் காட்டமாக.

இந்தத் தகவலைச்சொல்லி அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் பேசினோம். முழுமையாகக் கேட்டுக்கொண்டவர்,

அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி
அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி

``அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்கச் சொல்கிறேன். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism