Published:Updated:

`பெண்கள்தான் இலக்கு' - நாமக்கல்லை மிரட்டும் மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்!

''குமாரபாளையம் பகுதியில், விசைத்தறிகளில் வேலைசெய்யும் கூலித் தொழிலாளர்கள் அதிகம். இவர்களை குறிவைத்துதான் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன

மைக்ரோ ஃபைனான்ஸ்
மைக்ரோ ஃபைனான்ஸ்

சம்பவம் 1:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த உடையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம், சமீபத்தில் தன் மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சண்முகசுந்தரம் இறந்துவிட, அவரின் மனைவி காப்பாற்றப்பட்டார். தற்கொலைக்கான காரணம், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாதது.

சம்பவம் 2:

அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி ராஜு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காரணம் கடன் பிரச்னைதான். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/35cLn3m

26 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. இதுவே அதிகம்தான்.

இவர்கள் கடன் வாங்கியது, மீட்டர் வட்டி... ராக்கெட் வட்டி.. சூடு வட்டி... என விதவிதமான பெயர்களில் பணம் பறிக்கும் கந்துவட்டிக் கும்பலிடம் அல்ல; சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி செய்யும் 'மைக்ரோ ஃபைனான்ஸ்' நிறுவனங்களிடம். அடுத்தடுத்து நடந்த இந்தத் தற்கொலைச் சம்பவங்கள், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. கடன் தொல்லையால் தான் நாமக்கல்லில் தற்கொலைகள் அதிகரிக்கின்றன! கடந்த நான்கு மாதங்களில் மட்டும் எட்டு தற்கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

''அத்தனைக்கும் காரணம், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடிதான். ஆனால், தற்கொலைக்குக் காரணம் கடன் பிரச்னை என்று வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, எஃப்.ஐ.ஆரில் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பெயரைக் குறிப்பிடுவதே இல்லை'' என்று குற்றம்சாட்டுகிறார், வழக்கறிஞர் தங்கவேல்.

ஃபைனான்ஸ்
ஃபைனான்ஸ்

''குமாரபாளையம் பகுதியில், விசைத்தறிகளில் வேலைசெய்யும் கூலித் தொழிலாளர்கள் அதிகம். இவர்களை குறிவைத்துதான் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், குறைவான வட்டியில் கடன் வழங்குகின்றன. ஆனால், இந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் 26 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. இதுவே அதிகம்தான். ஆனால், அவர்களோ 40 சதவிகிதத்துக்கு அதிகமாக வசூலிக்கிறார்கள். மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள், வட்டிவிகிதத்தைக் கணக்கிடாமல் இவர்களிடம் கடன் வாங்கிவிடுகிறார்கள். கடைசியில் கட்ட முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள்'' என்றார் தங்கவேல்.

> ஆரம்பத்தில் ஆசைவார்த்தைகள் மூலம் கடனை தலையில் கட்டிவிடுவது முதல் பின்னர் அரங்கேற்றப்படும் அடாவடித்தனங்கள் வரையில், விரிவாக அனைத்தையும் சொல்லும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை வாசிக்க > அதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்! - நாமக்கல்லை மிரட்டும் மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள் https://www.vikatan.com/news/crime/microfinance-atrocities-in-namakkal

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |