Published:Updated:

அதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்!

மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்
பிரீமியம் ஸ்டோரி
மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்

நாமக்கல்லை மிரட்டும் மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்

அதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்!

நாமக்கல்லை மிரட்டும் மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்

Published:Updated:
மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்
பிரீமியம் ஸ்டோரி
மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடிகள்

- சம்பவம் 1:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த உடையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம், சமீபத்தில் தன் மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சண்முகசுந்தரம் இறந்துவிட, அவரின் மனைவி காப்பாற்றப்பட்டார். தற்கொலைக்கான காரணம், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாதது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவம் 2:

தே பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி ராஜு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காரணம் கடன் பிரச்னைதான்.

அதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்!

வர்கள் கடன் வாங்கியது, மீட்டர் வட்டி... ராக்கெட் வட்டி.. சூடு வட்டி... என விதவிதமான பெயர்களில் பணம் பறிக்கும் கந்துவட்டிக் கும்பலிடம் அல்ல; சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி செய்யும் ‘மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனங்களிடம். அடுத்தடுத்து நடந்த இந்தத் தற்கொலைச் சம்பவங்கள், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளன. கடன் தொல்லையால் தான் நாமக்கல்லில் தற்கொலைகள் அதிகரிக்கின்றன! கடந்த நான்கு மாதங்களில் மட்டும் எட்டு தற்கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

‘‘அத்தனைக்கும் காரணம், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடிதான். ஆனால், தற்கொலைக்குக் காரணம் கடன் பிரச்னை என்று வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, எஃப்.ஐ.ஆரில் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பெயரைக் குறிப்பிடுவதே இல்லை’’ என்று குற்றம்சாட்டுகிறார், வழக்கறிஞர் தங்கவேல்.

அதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்!

‘‘குமாரபாளையம் பகுதியில், விசைத்தறிகளில் வேலைசெய்யும் கூலித் தொழிலாளர்கள் அதிகம். இவர்களை குறிவைத்துதான் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், குறைவான வட்டியில் கடன் வழங்குகின்றன. ஆனால், இந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் 26 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. இதுவே அதிகம்தான். ஆனால், அவர்களோ 40 சதவிகிதத்துக்கு அதிகமாக வசூலிக்கிறார்கள். மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள், வட்டிவிகிதத்தைக் கணக்கிடாமல் இவர்களிடம் கடன் வாங்கிவிடுகிறார்கள். கடைசியில் கட்ட முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள்’’ என்றார் தங்கவேல்.

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, ‘‘இந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள், ஆரம்பத்தில் ஆசைவார்த்தைகள் மூலம் கடனை தலையில் கட்டிவிடுகின்றன. வாங்கிய கடனைக் கட்ட முடியாத சூழல் வரும் போதுதான் அவர்களின் சுயரூபம் தெரியும். பொது இடத்தில் வைத்து அசிங்கமாகத் திட்டுவார்கள். ஒரு நிறுவனத்தின் டார்ச்சர் தாங்க முடியாமல், அந்தக் கடனை அடைக்க இன்னொரு நிறுவனத்திடம் கடன் வாங்குவது, அதைச் சமாளிக்க மற்றொரு நிறுவனத்திடம் கடன் வாங்குவது என மொத்தமாக கடன் சுமை ஏறி... இறுதியில் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்த நிறுவனங்களில் தனிநபராக கடன் பெற முடியாது. குழுவாக இணைய வேண்டும். குழுவாக இணைந்து விண்ணப்பித்து, அதன் பிறகு தனித்தனியாகக் கடன் பெற்றுக்கொள்ளலாம். வாரத் தவணை, மாதத் தவணை என, கடனைத் திருப்பிச் செலுத்தலாம். கடன் வசூலிக்க நிறுவனத்தின் ஆட்கள் வரும்போது பத்து பேர் இருக்கும் ஒரு குழுவில், ஒருவர் தவணை செலுத்தாவிட்டாலும்கூட, மற்ற ஒன்பது பேரிடமும் வசூல் செய்ய மாட்டார்கள். இதனால், மொத்த உறுப்பினர்களும் அபராதம் செலுத்த வேண்டும். தவணை செலுத்த இயலாத பெண்ணை, மற்ற பெண்கள் ஆத்திரத்தில் திட்ட வேண்டிய சூழல் உருவாகும். தவணை செலுத்தாதவர் இதை தலைக்குனிவாகவும் கெளரவக் குறைச்சலாகவும் எடுத்துக்கொண்டு விபரீத முடிவுக்குச் சென்றுவிடுகிறார்’’ என்றார்.

அதிக வட்டி... ஆபாசப்பேச்சு... தற்கொலைக்கு தூண்டுதல்!

‘கிராம விடியல்’ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சீனிவாசனிடம் பேசினோம். “குழுவில் சரியாக பணம் கட்டவில்லை என்றால், எச்சரிக்கை செய்கிறோம்.அபராதத்துடன் உடனே கட்டச் சொல்கிறோம். எங்களது நிறுவனம் மட்டுமில்லை உஜ்ஜிவன், கிராமின் போன்ற நிறுவனங்களும் இதுபோன்றுதான் வசூல் செய்கின்றன. எப்படியாவது தவணைத்தொகையை வசூல் செய்ய வேண்டும் என்பது எங்கள் மேலதிகாரிகளின் உத்தரவு. இல்லையென்றால் எங்களது பணத்தை போட்டு கட்ட வேண்டும். எங்களுக்கும் வேறு வழியில்லை’’ என்றார்.

இதுகுறித்து நாமக்கல் எஸ்.பி அருளரசுவிடம் பேசினோம். ‘‘சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடன் தருவதுதான் பிரச்னையே. கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக மக்களும் பல குழுக்களில் கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் வாங்குவது சரியான தீர்வு அல்ல. அரசுடைமையாக்கப்பட்ட மகளிர் குழுக்கள் சரியாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனைக் கட்டவில்லை என்றால், முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும்; கெட்ட வார்த்தைகளால் திட்டக் கூடாது; ஆட்களை அழைத்துவந்து மிரட்டக் கூடாது என்று அனைத்து மைக்ரோ ஃபைனான்ஸ்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது’’ என்றார்.