Published:Updated:

புனே: நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு; 4 வாகனங்களில் பல கி.மீ சேஸிங் - ரூ.3.6 கோடி ஹவாலா பணம் கொள்ளை

சித்திரிப்புப் படம் - கொள்ளை

நள்ளிரவில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3.6 கோடியை மர்ம நபர்கள் நான்கு வாகனங்களில் விரட்டிச் சென்று கொள்ளையடித்துள்ளனர்.

புனே: நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு; 4 வாகனங்களில் பல கி.மீ சேஸிங் - ரூ.3.6 கோடி ஹவாலா பணம் கொள்ளை

நள்ளிரவில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3.6 கோடியை மர்ம நபர்கள் நான்கு வாகனங்களில் விரட்டிச் சென்று கொள்ளையடித்துள்ளனர்.

Published:Updated:
சித்திரிப்புப் படம் - கொள்ளை

மகாராஷ்டிரா மாநிலம், புனேயிலிருந்து சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில், பாவேஷ் குமார், விஜய்பாய் ஆகியோர் ஹவாலா பணம் ரூ.3.6 கோடியை கார் ஒன்றில் எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் காரில் பணத்துடன் செல்வதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சிலர் அந்தப் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக நான்கு வாகனங்களில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட காரை பின்தொடர்ந்து சென்றனர். வேகத்தடை ஒன்றில் பணத்துடன் சென்ற கார் மெதுவாகச் சென்றபோது அதைப் பின்தொடர்ந்து வந்த கார்கள் அதைத் தடுத்து நிறுத்த முயன்றன. ஆனால் பணம் இருந்த கார் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாகச் சென்றது.

அந்த காரை இரும்புக்கம்பி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கொள்ளையர்கள் விரட்டிச் சென்றனர். பணம் இருந்த காரைப் பல கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டிச் சென்றனர். அப்படியிருந்தும் பணம் இருந்த காரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றவர்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு பணம் இருந்த காரைத் தடுத்து நிறுத்தினர்.

புனே: நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு; 4 வாகனங்களில் பல கி.மீ சேஸிங் - ரூ.3.6 கோடி ஹவாலா பணம் கொள்ளை

பணம் இருந்த காரில் இருந்தவர்களை கொள்ளையர்கள் அடித்து உதைத்துவிட்டு காரிலிருந்த 3.6 கோடியை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து பணத்தை இழந்தவர்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்து கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கொள்ளையில் பணத்தை எடுத்துச் சென்ற இரண்டு பேரில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.