Published:Updated:

`சேர்ந்து வாழப்போறோம்னு தைரியமா சொல்லு' என்றார்! - கொலைக்கான பின்னணியை வெளியிட்ட மீஞ்சூர் பெண்

கொலை செய்யப்பட்ட கணேஷ்குமாருடன் சபரீதா
கொலை செய்யப்பட்ட கணேஷ்குமாருடன் சபரீதா

நான் சிறையிலிருந்த சமயத்தில் என் மனைவி சபரிதாவின் மனதை கணேஷ்குமார் மாற்றிவிட்டார். நான் குடியிருந்த வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சபரிதாவும் கணேஷ்குமாரும் தங்கியிருந்தனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. ``நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு மகன் உள்ளான். நான் கல்லூரியில் பி.எஸ்ஸி படித்திருக்கிறேன். எனக்கும் கணேஷ்குமார் என்கிற சத்தியாவுக்கும் 1.11.2013-ல் பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. என் கணவருடன் பழகிய ஆட்கள் சரியில்லாத காரணத்தால் என் கணவரை கடந்த 24.1.2020-ல் செங்குன்றம் போலீஸார் ஆள்கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சிறையிலிருந்தபோது என் கணவருக்கு விஸ்வநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 24.3.2020-ல் கொரோனா நோய் வேகமாகப் பரவியதன் காரணமாக சிறையிலிருந்த என் கணவரை விடுதலை செய்தார்கள்.

`நண்பனின் மனைவியோடு நட்பு; கடத்தல் பணத்தில் தகராறு!' -மீன் வியாபாரிக்கு மீஞ்சூரில் நேர்ந்த கொடூரம்

அவருக்கு சிறையில் பழக்கமான விஸ்வநாதன் என்வருடன் சேர்ந்து என் வீட்டுக்கு வந்து 2 நாள்கள் தங்கியிருந்தார். என் கணவர் ஜெயிலுக்கு செல்வதற்கு முன் கேசவபுரத்தில் சபரிதா என்ற பெண்ணுடன் பழகிவந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு என்னை அவர் அடித்தார். மேலும், கடந்த 5.5.2020-லிருந்து என் கணவர் என்னிடமிருந்து பிரிந்து வாழ்ந்துவருகிறார். பின் 15.6.2020-ல் காலை 9.15 மணிக்கு என் கணவரின் நண்பனான விஸ்வநாதன் எனக்கு போன் செய்து மீஞ்சூர் கேசவபுரத்தில் சபரிதாவுடன் தங்கியிருந்த என் கணவரை சபரிதாவின் கணவர் பசுபதியும் அவரின் கூட்டாளிகளான எழில்முத்து மற்றும் மணிகண்டன் ஆகியோர் பைக்கில் வந்து கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டதாகக் கூறினர்.

உடனே நான் கேசவபுரத்துக்கு வந்து பார்த்தபோது என் கணவரின் தலை, முகம், இடது கை மணிக்கட்டு மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீஸார் என் கணவரின் சடலத்தைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, என் கணவரை கொலை செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்து என் கணவரின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

பசுபதியுடன் சபரிதா
பசுபதியுடன் சபரிதா

கொலை

இந்த வழக்கில் பசுபதி, அவரின் கூட்டாளிகளான எழில்முத்து, மணிகண்டன் ஆகியோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பசுபதி போலீஸாரிடம் அளித்த தகவலில், ``நான் சிறையிலிருந்த சமயத்தில் என் மனைவி சபரிதாவின் மனதை கணேஷ்குமார் மாற்றிவிட்டார். நான் குடியிருந்த வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சபரிதாவும் கணேஷ்குமாரும் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் எச்சரித்தேன். ஆனால், கேட்கவில்லை. அதனால்தான் கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார்.

சபரிதா

சபரிதாவிடம் போலீஸார் கொலை குறித்து நீண்ட நேரம் விசாரித்தனர். அப்போது அவர் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார். போலீஸாரிடம் சபரிதா, ``ஒரு மாதமாக நானும் கணேஷ்குமாரும் சேர்ந்து வாழ்ந்தோம். என் கணவர் பசுபதிக்கும் கணேஷ்குமாருக்கும் வாய்தகராறு இருந்துவந்தது. இந்தச் சமயத்தில்தான் பசுபதி, என்னிடம் நேற்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் `உனக்கு பசுபதி ஏன் போன் செய்கிறார்' என்று சண்டை போட்டார். மேலும், அவர், `நீ என்கூடதான் இருக்கிறாய் என்பதை பசுபதியிடம் தைரியமாகச் சொல்லு... நாங்கள் இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம்' என்று கூறும்படி தெரிவித்தார்.

சபரிதா
சபரிதா

உடனே நான், `தேவையில்லாத பிரச்னை ஏற்படும்' என்று கூறினேன். மேலும், `விவாகரத்து வாங்க வேண்டும்' என்றேன். ஆனால், கணேஷ்குமார் அதைக் கேட்காமல் பசுபதிக்கு போன் செய்து, `நான் இங்குதான் இருக்கிறேன்... உன்னால் முடிந்ததைச் செய்' என்று தெரிவித்தார். அதன்பிறகுதான் பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் வந்து கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டனர். என்னையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால், நான் தப்பி ஓடிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு