Published:Updated:

குளிர்பானத்தில் மயக்கமருந்து; பேருந்தில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - பீகாரில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

பீகாரில் சிறுமி ஒருவர் பேருந்தில் வைத்து மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குளிர்பானத்தில் மயக்கமருந்து; பேருந்தில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - பீகாரில் அதிர்ச்சி

பீகாரில் சிறுமி ஒருவர் பேருந்தில் வைத்து மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் பெட்டியா நகரில் சிறுமி ஒருவர் பேருந்தில் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு பேருந்தின் ஓட்டுநர் மயக்கமருந்து கலந்த குளிபானத்தைக் குடிக்க கொடுத்திருக்கிறார். அதைக் குடித்தவுடன் அந்த சிறுமி மயக்கநிலைக்குச் சென்றுள்ளார். அதையடுத்து பேருந்து ஓட்டுநர், அவருடன் இருந்த இருவர் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கின்றனர். மயக்க நிலையில் இருந்ததால் சிறுமியால் அவர்களைத் தடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூவரும், ஓடும் பேருந்தில் வைத்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பின்னர் அந்த சிறுமியை அந்தப் பேருந்திலேயே விட்டுவிட்டு மூவரும் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

அதையடுத்து இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

இந்த நிலையில் இன்று அந்தப் பேருந்தை பறிமுதல் செய்த போலீஸார், சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோரைக் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நபரை தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism