Published:Updated:

டெல்லி: திருமணம் மீறிய உறவு; 48 வயது பெண்ணின், 17 வயது மகளை இடைஞ்சல் எனக் கொன்ற 18 வயது இளைஞர்!

கொலை

டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்துவந்த 17 வயது சிறுமியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்துவருபவர் ஹரிஷ் (18). பஹதுர்கரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இவர் பணியாற்றிவந்திருக்கிறார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றிவந்த 48 வயது பெண்ணுடன் ஹரிஷுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்திருக்கிறார். ஹரிஷ், இந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்துவந்ததாகத் தெரிகிறது. தன்னுடைய தந்தை உயிருடன் இருக்கும்போதே, அம்மா வேறு ஒருவருடன் பழகுவது இந்தச் சிறுமிக்கு மனவேதனையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

கைது
கைது

தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் 17 வயது சிறுமியை கொல்ல முடிவெடுத்த ஹரிஷ், ஒரு பூங்காவில்வைத்து அந்தச் சிறுமியின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இளைஞரிடமிருந்து அந்தச் சிறுமியைக் காப்பாற்றினர். மேலும் இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறையினர் ஹரிஷ் மீது வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்து அவரைச் சிறையில் அடைத்தனர். டெல்லியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.