Published:Updated:

16 வயது சிறுமி, 6 மாதங்களாக அனுபவித்த கொடுமை - பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா உள்ளிட்ட மூவர் கைது

கைதானவர்கள்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் சித்தப்பா, காதலன் உள்ளிட்ட மூவரை குளித்தலை மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

16 வயது சிறுமி, 6 மாதங்களாக அனுபவித்த கொடுமை - பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா உள்ளிட்ட மூவர் கைது

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் சித்தப்பா, காதலன் உள்ளிட்ட மூவரை குளித்தலை மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கைதானவர்கள்

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, இதே மாவட்டத்தில் இருக்கும் மற்றொரு ஊரிலுள்ள தனது தாத்தா வீட்டில் வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 6 -ம் தேதி அருகிலுள்ள சோளக்காட்டில் அந்தச் சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த செங்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக் கண்ட சிறுமியின் சித்தப்பா இடும்பன் (31) பெரியசாமியை விரட்டிவிட்டு, தன் மகள் முறை என்றும் பாராமல் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும், அந்தச் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அவரும் சிறுமியிடம் பாலியல்ரீதியாகத் தொடர்ந்து வன்கொடுமை செய்துவந்திருக்கிறார்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இப்படி, கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் மூன்று பேரும், அந்தச் சிறுமியை மாறி மாறிப் பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் மூன்று பேரும் அந்தச் சிறுமியைப் பாலியல்ரீதியாக வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் நிலைய போலீஸார் மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்துள்ளனர். மேலும், அவர்கள் மூன்று பேரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கிளைச் சிறையில் அடைத்தனர்.