Published:Updated:

பொள்ளாச்சி வீடியோ போல கசாம்பி சம்பவம்!- சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பொள்ளாச்சி சம்பவம்போல இந்தச் சிறுமியும் வீடியோவில் அந்த நபர்களிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார்.

sexual harassment
sexual harassment

பாலியல் வன்கொடுமை இந்தியாவில் நான்காவது பெரிய குற்றம் என வரையறுக்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். சமீபத்தில் திருத்தப்பட்ட போக்ஸோ சட்டமும் இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் எனச் சொல்கிறது. ஆனாலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நீதி வழங்குவதற்கான மந்தமான சட்ட செயல்முறை பெரும்பாலும் பெரும் பின்னடைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாகி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தினமும் ஏதாவது ஒரு பாலியல் குற்றம் வெளி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தை உலுக்கியது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி வீடியோ போல கசாம்பி சம்பவம்!- சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதற்கிடையில் பொள்ளாச்சி சம்பவம்போல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே உள்ள கசாம்பி மாவட்டத்தின் கோசியா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினச் சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு புல் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வீடியோவாக எடுத்து கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரப்பிவிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவம்போல இந்தச் சிறுமியும் வீடியோவில் அந்த மூன்று பேரிடமும் 'கடவுளின் பொருட்டு என்னை இப்படி செய்யாதீர்கள் பையா (சகோதரர்)' எனக் கெஞ்சுகிறார்.

பொள்ளாச்சி வீடியோ போல கசாம்பி சம்பவம்!- சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

ஆனால், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கொடூரமான இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சிறுமியின் தந்தை இந்தச் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கச் சென்றபோது அவர்கள் புகார் பெற மறுத்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், விவகாரம் பெரிதாகவே புகாரை பெற்றுகொண்டதாகத் தெரிகிறது.

பொள்ளாச்சி வீடியோ போல கசாம்பி சம்பவம்!- சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் முகமது சோட்கா (20), பட்கா (22) மற்றும் முகமது நஜிம் (20) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சோட்கா மற்றும் பட்கா இருவரும் சகோதரர்கள். வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி சோட்கா, பட்கா சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர். இருப்பினும் நஜீம் என்பவர் ஊர் மக்களிடம் சிக்க அவரை சரமாரியாகத் தாக்கி போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

92 வீடியோக்கள்... 40 பெண்கள்... சிக்கும் அரசியல்வாதிகள்..!- ம.பி.யை பதறவைக்கும் பாலியல் வழக்கு

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அலகாபாத் சாலையில் சோட்கா இருப்பதை அறிந்த போலீஸார் அவரைத் தேடி சென்றுள்ளனர். அப்போது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சோட்கா சுட பதிலுக்கு போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பின்பு, சோட்காவின் இரண்டு கால்களிலும் சுட்டு அவரைப் பிடித்துள்ளனர். பட்காவை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.