Published:Updated:

பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு ரயிலேறிய சிறுமி; பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியர் கைது!

ரயில்வே ஊழியர் கைது ( சித்திரிப்புப் படம் )

உத்தரப்பிரதேசத்தில், பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டுக் கிளம்பி ரயிலேறிய சிறுமியை, ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியர் கைதுசெய்யப்பட்டார்.

பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு ரயிலேறிய சிறுமி; பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியர் கைது!

உத்தரப்பிரதேசத்தில், பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டுக் கிளம்பி ரயிலேறிய சிறுமியை, ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
ரயில்வே ஊழியர் கைது ( சித்திரிப்புப் படம் )

உத்தரப்பிரதேசத்தில், பெற்றோர் திட்டியதால் சிறுமியொருவர் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பி ரயிலில் சென்றபோது, ரயில்வே ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கிறார். மஹோபாவிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்த சிறுமி, ஜான்சி-எட்டாவா இன்டர்சிட்டி ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார். ரயில் எட்டாவாவை அடைந்ததும், சிறுமிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் புரியவில்லை.

பின்னர் சிறுமி ரயிலிலேயே தங்குவதாக முடிவுசெய்தார். அதைத் தொடர்ந்து ரயிலில் சிறுமி தனியாக இருப்பதைக் கண்ட ரயிலைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர் ஒருவர், சிறுமியிடம் அவரைப் பற்றி விசாரித்து சிறுமியின் பெற்றோரிடம், `உங்கள் மகள் காலையில் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுவார். கவலைப்பட ஒன்றுமில்லை' என உறுதியளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.

கைது
கைது

அடுத்த நாள் காலையில் சிறுமி தன்னுடைய பெற்றோரை அழைத்து, தன்னைக் கூட்டிச்செல்லும்படி கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறியிருக்கிறார். அதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட நபர்மீது ரயில்வே போலீஸில் புகாரளித்தனர். தொடர்ந்து புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ரயில்வே போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்து, பிரிவு 376, போக்சோ சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.