Published:Updated:

4 மாதங்களுக்கு முன்பு மாயமான இளம்பெண் - சகோதரனுடன் இணைந்து கொன்று, குளத்தில் வீசிய காதலன் கைது!

கொலைசெய்த மாதவன் - திருக்கண்ணன்

சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வாசுகியைக் குளத்தில் அமுக்கிக் கொலைசெய்ததுடன் உடலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். கொலைசெய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வாசுகியின் மண்டை ஓடு, எலும்புகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

4 மாதங்களுக்கு முன்பு மாயமான இளம்பெண் - சகோதரனுடன் இணைந்து கொன்று, குளத்தில் வீசிய காதலன் கைது!

சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வாசுகியைக் குளத்தில் அமுக்கிக் கொலைசெய்ததுடன் உடலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். கொலைசெய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வாசுகியின் மண்டை ஓடு, எலும்புகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

Published:Updated:
கொலைசெய்த மாதவன் - திருக்கண்ணன்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நான்கு மாதங்களுக்கு முன்னால் காணாமல்போன நிலையில், அவரின் காதலன் தன்னுடைய அண்ணனுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணைக் கொலை செய்து குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இளம்பெண்ணின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளைக் கண்டுபிடித்த போலீஸார் கொலைசெய்த சகோதரர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட வாசுகி
கொலைசெய்யப்பட்ட வாசுகி

ராமநாதபுரம் மாவட்டம், வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (25). அதே ஊரைச் சேர்ந்தவர் வாசுகி (25). இருவரும் காதலித்துவந்துள்ளனர். ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் மாதவன் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் ஆடு மேய்ச்சலுக்குவிட்டு கிடை போடும் பணி செய்திருக்கிறார். செங்கிப்பட்டியிலேயே தங்கியிருந்து ஆடுகளை கவனித்துவந்த மாதவன், அவ்வப்போது ஊருக்குச் சென்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் வாசுகியைச் சந்தித்திருக்கிறார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் வாசுகி கர்ப்பமாகியிருக்கிறார். அதைத் தன் பெற்றோரிடம் வாசுகி சொல்லவும் இல்லை. வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்ற பயத்திலேயே இருந்திருக்கிறார். இந்த நிலையில் தன் காதலனைப் பார்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பெற்றோரிடம் சொல்லாமல் செங்கிப்பட்டிக்குச் சென்றிருக்கிறார் வாசுகி.

மண்டை ஓடு
மண்டை ஓடு

இதற்கிடையில் வாசுகியைக் காணவில்லை என அவரின் தந்தை உடையார், கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் வாசுகி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வாசுகியைக் காணவில்லை என அவரின் படத்துடன் போலீஸார் ராமநாதபுரத்தில் போஸ்டர் விளம்பரம் செய்தனர்.

ஆனாலும் வாசுகி எங்கு இருக்கிறார்... என்ன ஆனார் என எந்த விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் வாசுகியும் மாதவனும் காதலித்துவந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஊருக்குச் சென்றிருந்த மாதவனை, சந்தேகத்தின் பேரில் பிடித்து கீழத்தூவல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், `வாசுகி கர்ப்பமானதால் என்னைப் பார்க்க வந்ததுடன் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். அதனால் எனது அண்ணனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டேன்’ எனக் கூறி போலீஸாரை அதிரவைத்திருக்கிறார் மாதவன்.

கொலை செய்த திருக்கண்ணன்
கொலை செய்த திருக்கண்ணன்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``வீட்டிலிருந்து சென்ற வாசுகி, செங்கிப்பட்டிக்குச் சென்று மாதவனைப் பார்த்திருக்கிறார். தான் கர்ப்பமாக இருப்பதைக் கூறியதுடன், உடனே திருமணம் செய்துகொள்ளச் சொல்லியிருக்கிறார். மாதவனுக்கு அதில் விருப்பம் இல்லை. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாசுகியைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்திருக்கிறார் மாதவன். அதற்காக, தன் அண்ணன் திருக்கண்ணனைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டார். செங்கிப்பட்டி டி.பி சானிடோரியத்திலிருந்து அயோத்திப்பட்டிக்குச் செல்லும் சாலையில் கருவைக்காடு இருக்கிறது. ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதிக்கு வாசுகியை ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்கிறார்.

அத்துடன் அங்கிருந்த குளத்தில் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வாசுகியை அமுக்கிக் கொலைசெய்துவிட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். கொலைசெய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், வாசுகியில் மண்டை ஓடு, எலும்பு, கிழிந்த நிலையில் அவர் அணிந்திருந்த உடை ஆகியவை மீட்கப்பட்டன. இதையடுத்து சகோதரர்கள் இருவரையும் கைதுசெய்திருக்கிறோம். மேலும், அவர்களிடம் விசாரணை தொடர்ந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.