Published:Updated:

`ஏன் இந்த வேகம்; பைக்கில் மெதுவா போ!'- அட்வைஸ் சொன்னவரை கத்தியால் குத்திக்கொன்ற கும்பல்

எம்.திலீபன்

`மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் ஏண்டா டூவீலரில் வேகமா போற' என்று தட்டிக்கேட்டவருக்கு கத்திக் குத்து.

உயிரிழந்த பாஸ்கர்
உயிரிழந்த பாஸ்கர்

'மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தில் ஏண்டா டூவீலரில் வேகமா போற' என தட்டிக்கேட்டவர் மற்றும் அவரது நண்பர்களைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், மூவரை பெரம்பலூர் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலை
கொலை

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, இவர் எளம்பலூர் வடக்குத் தெருவில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக டூவீலரை ஓட்டிச்சென்றார். இதைப்பார்த்த எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மதுரை என்பவர், மாரிமுத்துவின் வண்டியை நிறுத்தி, 'மக்கள் வசிக்கும் பகுதியில் அதிவேகமாகச் சென்றால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பாவது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கூட டூவிலரில் அதிவேகமாகச் சென்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அது உனக்குத் தெரியுமா... இப்பகுதியில் வேகமா பேகா தே'னு சொல்லியிருக்கிறார். நீ என்னடா சொல்றதுனு அசிங்கமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் மாரிமுத்து. இருவரும் கூடக்குறைய பேச, கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்னை வராமல் இருவரையும் தடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

கொலை
கொலை

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, அவர்களது நண்பர்களான கோபிநாத், ராஜாராமன், கார்த்திக் ஆகியோரை அழைத்து வந்துள்ளார். அப்போது, தர்மதுரை அவர்களது நண்பர்களான பாஸ்கர்,ராஜேஷ்,பிரகாஷ் ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பின் பக்கத்திலிருந்து வந்து மூவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில், படுகாயமடைந்த பாஸ்கர்,ராஜேஷ்,பிரகாஷ், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பாஸ்கர், பிரகாஷ் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதில்,பாஸ்கர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப் பதிந்து கோபிநாத், கார்த்திக், ராஜாராமன் ஆகியோரைக் கைது செய்து விசாரித்துவருகிறார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசினோம்.” இரண்டு மாதத்திற்கு முன்புகூட இப்பகுதியில் அதிவேகமாகச் சென்று ஒருவர்மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், அதி வேகமாக வண்டியை ஓட்டக்கூடாது என்று சொல்வது தப்பா.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

இதில் ஆத்திரமடைந்து, மூவரை கத்தியால் குத்துகிறான் என்றால், அவர்களது மனநிலை எப்படி இருக்கும். இதுபோன்ற ரவுடிகளை வெளியில் விடக்கூடாது அவர்கள்மீது கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள்.