Published:Updated:

OLX-ல் விளம்பரம்: `பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு!’ - 4 பேரை கைதுசெய்த போலீஸ்

மோடி
மோடி

பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை மர்ம நபர்கள் சிலர் புகைப்படம் எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்., (OLX) இணையதளத்தில், ரூ. 7.50 கோடிக்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், குஜராத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேலின், சிலையை 30,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவிருப்பதாக ஓ.எல்.எக்ஸ் (OLX) இணையதளத்தில் வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியிலுள்ள அவரது தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்-ல் பதிவிட்டு, அலுவலகத்தின் விலை ஏழரை கோடி என விளம்பரம் வெளியிட்ட நான்கு பேரை வாரணாசி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது நாடாளுமன்றத் தொகுதி அலுவலகம் வாரணாசியில், ஜவஹர் நகர் பகுதியில் அமைந்துள்ளது.

OLX-ல் விளம்பரம்: `பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு!’ - 4 பேரை கைதுசெய்த போலீஸ்

பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை மர்ம நபர்கள் சிலர் புகைப்படம் எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்., (OLX) இணையதளத்தில், ரூ. 7.50 கோடிக்கு விற்பனை செய்யப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று (டிசம்பர் 17) மோடியின் தொகுதி அலுவலகம் விற்பனை தொடர்பான OLX விளம்பரம் குறித்து வாரணாசி நகர போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை தொடர்பாக பேசிய வாரணாசி எஸ்.எஸ்.பி., அமித் குமார் பதக் (Amit Kumar Pathak), ``ஓ.எல்.எக்ஸ்., (OLX) விளம்பரப் பதிவு எண் 1612346492 -ன்படி `ஹவுஸ் & வில்லா’ என்ற வீடு சார்ந்த பதிவுகளின் கீழ் `குளியலறையுடன் நான்கு படுக்கையறைகள் உள்ள கட்டடம் விற்பனைக்குள்ளது’ என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் மோடியின் அலுவலகம் சார்ந்த விளம்பரம் லஷ்மிகாந்த் ஓஜா (Laxmikant Ojha) என்பவரின் ஓ.எல்.எக்ஸ் கணக்கிலிருந்து (OLX Account) பகிரப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது" என்றார்.

கைது
கைது
Representational Image

`பிரதமர் அலுவலகம் வாரணாசி’ (PMO OFFICE VARANASI) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தில், `கட்டடத்தின் பகுதி 6,500 சதுர அடி, இரண்டு மாடிக் கட்டடம், வடகிழக்கு திசையில் கார் நிறுத்த இடம் இருக்கிறது’ போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய வாரணாசி காவல்துறையினர், விளம்பரத்துக்காகப் புகைப்படத்தை எடுத்த நபர் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அந்த விளம்பரத்தைத் தனது தளத்திலிருந்து ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு