Published:Updated:

வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி; கர்நாடக இளைஞர் கைது - காதலியைத் தேடும் போலீஸார்

ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல் நிலையம்

மாருதி ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தி Quickr.com என்ற தனியார் இணையதளத்தில் வேலை தேடுபவர்களின் பெயர் முகவரிகளைப் பெற்று காதலி எசாசினியிடம் கொடுத்திருக்கிறார்.

வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி; கர்நாடக இளைஞர் கைது - காதலியைத் தேடும் போலீஸார்

மாருதி ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தி Quickr.com என்ற தனியார் இணையதளத்தில் வேலை தேடுபவர்களின் பெயர் முகவரிகளைப் பெற்று காதலி எசாசினியிடம் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல் நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் என்பவருடைய மனைவி மனோஜா.‌ இவர் ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் கூறியதை நம்பி ரூ.25 ஆயிரத்தை ஏமாந்திருக்கிறார். இது குறித்து ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நபரின் செல்போன் எண்கள், பணம் பரிவர்த்தனை செய்த வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் அவை கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி‌ தங்கதுரை உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையிலான போலீஸார் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விரைந்தனர்.

கைது செய்யப்பட்ட மாருதி
கைது செய்யப்பட்ட மாருதி

அங்கு அந்த நபரின் செல்போன் எண் சிக்னலைத் தொடர்ந்து சென்றதில் அது பெங்களூர், நாகர்பாவி, பாரப்பட்டிபாளையம் அருகிலுள்ள ஒரு தனியார் காம்ப்ளக்ஸுக்குள் செயல்பட்டுவரும் 'குலோபல் லிங்க் டெக்’ என்ற நிறுவனத்துக்குள் சென்றிருக்கிறது. அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் போலீஸார் வருவதைக் கண்டு தப்பி ஓடியிருக்கிறர். அவரை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் மாருதி என்பதும், போலி நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்துவந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்த இரண்டு லேப்டாப்புகள், ஐந்து ஆண்ட்ராய்டு செல்போன்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து ராமநாதபுரத்துக்குக் கொண்டுவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராமநாதபுரத்தில் வைத்து தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். இது குறித்து நம்மிடம் பேசிய சைபர் க்ரைம் போலீஸார், கர்நாடக மாநிலம், ராம்நகரா பச்சனத்தி கிராமத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரி மாருதி. கல்லூரிப் படிப்பை முடித்து தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் Data entry operator-ஆக பணியாற்றிவந்திருக்கிறார். அப்போது, வேலை வாங்கித் தருவதாகப் பொதுமக்களை எளிதாக ‌ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கலாம் என அந்த நிறுவனத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் பணம்
பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் பணம்

பின்னர் கல்லூரிக் காதலியான எசாசினி என்பவருடன் சேர்ந்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கு இரண்டு லேப்டாப்கள், ஏழு செல்போன்கள், போலியான பெயர்களில் சிம்கார்டுகள் வாங்கி 'குளோபல் லிங்க் டெக்' என்ற போலியான நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் தமிழ், கன்னடம் தெரிந்த ஐந்து பெண்களை டெலி காலர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறிப் பேசுவதற்கு காதலியான எசாசினி பயிற்சியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மாருதி ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தி Quickr.com என்ற தனியார் இணையதளத்தில் வேலை தேடுபவர்களின் பெயர் முகவரிகளைப் பெற்று காதலி எசாசினியிடம் கொடுத்திருக்கிறார்.

அதில் தமிழர்களாக இருந்தால், தமிழ் தெரிந்த பெண் டெலி காலர் மூலமாகவும், கன்னடராக இருந்தால் கன்னடம் தெரிந்த பெண் டெலி காலர் மூலமும் தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, registration fees, application fees, processing fees, documentation fees, refund charges என வசூல் செய்துள்ளனர்.
அதன்படி இதுவரை ரூ.10 லட்சம்வரை மோசடி செய்து சம்பாதித்துள்ளனர். அந்தப் பணத்தைக்கொண்டு இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைதான மாருதியை ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருடைய காதலி எசாசினியை கர்நாடக போலீஸார் உதவியுடன் தமிழக சைபர் க்ரைம் போலீஸார் தேடிவருகின்றனர்.