Published:Updated:

நிலக்கரி, சமையல் காஸ் புகை... ஃபாயில் கவரால் மறைக்கப்பட்ட அறை! - டெல்லியை அதிரவைத்த மூவர் தற்கொலை

டெல்லி மூவர் தற்கொலை

அறைக்குள் விஷவாயுவை உருவாக்கி இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலக்கரி, சமையல் காஸ் புகை... ஃபாயில் கவரால் மறைக்கப்பட்ட அறை! - டெல்லியை அதிரவைத்த மூவர் தற்கொலை

அறைக்குள் விஷவாயுவை உருவாக்கி இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
டெல்லி மூவர் தற்கொலை

டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் உமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா என்பவர் தன் மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்தாண்டு கொரோனாவால் அவர் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் குடும்பம் பெரும் கவலையிலிருந்ததாகத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்ததால், இரண்டு மகள்களுடன் உமேஷின் மனைவி தற்கொலை செய்துகொள்வதென முடிவு செய்திருக்கிறார். கடந்த சில தினங்களாக அக்கம்பக்கத்தினருடன் பேசாமல், விரக்தியிலிருந்த உமேஷ் குடும்பம், வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு நிலக்கரி, சமையல் காஸ் புகையை அறை முழுவதும் நிரப்பி அதன்மூலம் மூச்சுத்திணறி மூவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

உமேஷ் வீடு
உமேஷ் வீடு
ட்விட்டர்

வீட்டில் புகை மிகுதியாக இருந்ததன் காரணமாக அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உமேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடங்கங்களிடம் பேசிய டெல்லி போலீஸார், ``50 வயதான உமேஷின் மனைவி மஞ்சு ஸ்ரீவஸ்தவா, அவர் மகள்கள் அன்ஷிகா ஆகியோர் தங்கள் வீட்டை விஷவாயு அறையாக மாற்றி மூச்சுத் திணறி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அனைத்து கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்றவற்றை அலுமினியம் ஃபாயில் கவரால் மூடியிருக்கின்றனர். அறையிலிருந்து புகை வெளியேறாமல் இருப்பதையும், உள்ளே யாரும் பார்க்க முடியாதவாறும் மறைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நிலக்கரி புகையை அறையில் நிரப்பி, பின்னர் சமையல் காஸ் சிலிண்டரை ஆன் செய்திருக்கின்றனர். அறையில் காற்றோட்டம் இல்லாததால் விஷ கார்பன் மோனாக்சைடு உருவாகி, மூவரும் மூச்சுத்திணறி இறந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்கொலை
தற்கொலை

மேலும், அவர்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் கடிதம் அதிர்ச்சியளித்தது. அந்த கடிதத்தில், `பிளாட்டுக்குள் நுழைபவர்கள் தீப்பெட்டியை எரியவிடாதீர்கள். மிகவும் கொடிய கார்பன் மோனாக்சைடு வாயு அறையில் நிரம்பியுள்ளது.

அது எரியக்கூடியது. ஜன்னலைத் திறந்து மின்விசிறியைத் ஓடவிட்டு அறையைக் காற்றோட்டம் செய்யுங்கள். தீப்பெட்டி, மெழுகுவத்தி அல்லது எதையும் எரிய விட வேண்டாம்! மேலும், வாயுவை உள்ளிழுக்க வேண்டாம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism