Published:Updated:

போன் பேசிய கணவன்; கண்டித்த மனைவி; தாய், மகள் தற்கொலையில் முடிந்த தகராறு!

தற்கொலை
தற்கொலை

சென்னையில் தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, கலைவாணர் நகர், இயேசுநாதர் தெருவைச் சேர்ந்தவர் கவிதா (38) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் கணவர் அசோக் ராஜபாண்டி. இவர் அந்தப் பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். இந்தத் தம்பதியருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். பொதுவாக, அசோக் ராஜபாண்டி, நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரே வீட்டில் குடியிருந்தாலும், கவிதாவும் அசோக் ராஜபாண்டியும் பேசாமல் இருந்தனர்.

தற்கொலை
தற்கொலை
Representational image

அதனால் மனமுடைந்த கவிதா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தன்னுடைய மகளை தனியாக விட்டுச் செல்ல கவிதாவுக்கு மனமில்லை. அதனால் தன் தற்கொலை முடிவை மகளிடம் கூறியிருக்கிறார் அதைக் கேட்ட கவிதாவின் மகளும் தற்கொலை செய்துகொள்ளச் சம்மதித்திருக்கிறார். இதையடுத்து வீட்டிலிருந்த கவிதாவும், அவரின் மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். நீண்ட நேரமாகக் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கவிதாவும், அவரின் மகளும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இருவரையும் மீட்டு அண்ணாநகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கவிதா, அவரின் மகள் இருவரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருவரும் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தற்கொலை செய்துகொண்ட கவிதா
தற்கொலை செய்துகொண்ட கவிதா
பானிபூரியால் நிகழ்ந்த சோகம்; மனைவி தற்கொலை; அதிர்ச்சியில் கணவன்; போலீஸ் விசாரணை!

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கவிதாவின் கணவர் அசோக் ராஜபாண்டியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்திருக்கிறது. குறிப்பாக அவர், செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அது குறித்து அசோக் ராஜபாண்டிடம் கவிதா கேட்டதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. ஆனால், தன்னுடைய கணவரின் நடவடிக்கை, அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரங்களைத் தெரிந்துகொண்ட கவிதா மனவேதனையடைந்தார். பிறகு கணவருக்கு புத்திமதி கூறியும் அசோக் ராஜபாண்டி கேட்கவில்லை. அதனால்தான் கவிதாவும், அவரின் மகளும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது" என்றனர்.

தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு