Published:Updated:

`மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

குடும்பத்தை தீ வைத்து கொளுத்திய ஊழியர்
குடும்பத்தை தீ வைத்து கொளுத்திய ஊழியர்

சென்னை, மதுரவாயல் அருகே வீட்டைவிட்டு விரட்டியதால் ஆத்திரமடைந்த தனியார் ஊழியர், தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தை தீ வைத்துக் கொளுத்தினார். அதில் தாய், மகன் உயிரிழந்தனர்.

கொல்கத்தா, ஹவுராவைச் சேர்ந்தவர் மக்ஃபுல் அலி சர்தார் (40). இவரின் மனைவி கொரசா பேகம்(40). இவர்களுக்கு அக்ரம் மல்லிக் (22) என்ற மகனும், மஹிதா பாசும் (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக மதுரவாயலை அடுத்த புளியம்பேடு மெயின் ரோடு, நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! - தலையணையால் அமுக்கிக் கொன்ற கணவன் கைது

மக்ஃபுல் அலி சர்தார் டூவிலர் ஷோரூமில் வேலைபார்த்தார், கொரசா பேகம், அக்ரம் மல்லிக் ஆகியோர் வேலப்பன்சாவடியில் உள்ள ஷு கம்பெனியில் வேலைபார்த்தனர். மக்புஃல் அலி சர்தார், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் அவருக்கும் கொரசா பேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மக்ஃபுல் அலி சர்தார் வீட்டுக்கு வரவில்லை.

கொரசா பேகம் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்துவந்தார். 7-ம் தேதி வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் மூன்று பேரும் வெளியில் படுத்திருந்தனர். அப்போது மக்ஃபுல் அலி சர்தார் அங்கு வந்தார். அவருக்கும் கொரசா பேகத்துக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்த மக்ஃபுல் அலி சர்தார், மனைவி கொரசா பேகம், அக்ரம் மல்லிக், மஹிதா பாசும் ஆகியோர் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் மூன்று பேர் மீதும் தீப்பிடித்தது. அதனால் அவர்கள் அலறினர்.

அக்ரம் மல்லிக்
அக்ரம் மல்லிக்
`மார்ச் 3-ல் மனைவி மரணம்; 2 மாதங்களாக 6 வயது மகளிடம் தவறாக நடந்த தந்தை' - ஆன்லைன் புகாரில் அதிரடி

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து மூன்று பேரையும் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி கொரசா பேகம், அக்ரம் மல்லிக் ஆகியோர் இறந்தார். மஹிதா பாசும் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் மக்ஃபுல் அலி சர்தாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொரசா பேகம், மக்ஃபுல் அலியை 2-வதாகத் திருமணம் செய்துகொண்டவர். ஆனால், இருவருக்கும் குழந்தை இல்லை. கொரசா பேகத்தின் முதல் கணவருக்கு மூன்று குழந்தைகள். அதில் 2-வது மகன் அக்ரம் மல்லிக், மஹிதா பாசும் ஆகியோருடன் மக்ஃபுல் அலி சர்தாருடன் கொரசா பேகம், சென்னையில் குடியிருந்து வந்துள்ளார்.

மக்ஃபுல் அலி சர்தார்
மக்ஃபுல் அலி சர்தார்

கொரசா பேகத்தின் நடந்தையில் சந்தேகமடைந்த மக்ஃபுல் அலி சர்தார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். அதனால் மக்ஃபுல் அலி சர்தாரை கொரசா பேகம் வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்ஃபுல் மூன்று பேரையும் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய திட்டமிட்டு, அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் கொரசா பேகம், அக்ரம் மல்லிக் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்" என்றார்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு