Published:Updated:

மதுரை: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெண் தற்கொலை; தீவிர சிகிச்சையில் கணவர் - நடந்தது என்ன?!

தனலட்சுமி-அய்யனார் குழந்தைகளுடன்

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெண் தற்கொலை; தீவிர சிகிச்சையில் கணவர் - நடந்தது என்ன?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தனலட்சுமி-அய்யனார் குழந்தைகளுடன்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியில் வசித்துவந்த அய்யனார்-தனலட்சுமி தம்பதிக்கு 14 வயதான ஹரி கிருஷ்ணன், 12 வயதான குபேந்திர கிருஷ்ணன் என இரு மகன்கள். அருகிலுள்ள பள்ளியில் படித்துவந்த நிலையில்தான் கடந்த 31-ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் தனலட்சுமி. அவர் கணவர் அய்யனாரும் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தனலட்சுமி-அய்யனார் குழந்தைகளுடன்
தனலட்சுமி-அய்யனார் குழந்தைகளுடன்

தற்கொலைச் சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``கடந்த சில நாள்களாக அய்யனாருக்கும் தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. கடந்த 30-ம் தேதி இரவும் வழக்கம்போல இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அய்யானர், வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.

விஷம்
விஷம்

அதன் பிறகு வீட்டிலிருந்த தனலட்சுமி, குழந்தைகளுக்கு விஷத்தைக் குடிக்கக் கொடுத்து, தானும் குடித்திருக்கிறார். சிறிது நேரத்தில் மூவரும் மரணடைந்துள்ளனர். நள்ளிரவு வீடு திரும்பிய அய்யனார் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.

அங்கு நுரை தள்ளியபடி இறந்து கிடந்த மனைவி, பிள்ளைளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்பு அவரும் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்திருக்கிறார்.

கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது மூன்று பேர் இறந்தும், அய்யனார் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்ததையும் பார்த்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையில் தனலட்சுமி தற்கொலை செய்தது உறுதியாகியிருக்கிறது. வேறு ஏதும் காரணமா என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அய்யனார் சுயநினைவுக்கு வந்த பிறகு விசாரித்தால்தான் தெரிய வரும்" என்றனர்.

தற்கொலை
தற்கொலை

கடந்த ஆகஸ்ட்டில் இதே அலங்காநல்லூர் வட்டாரத்திலுள்ள பெரிய இலந்தைகுளத்தில் இரண்டு பிள்ளைகளுடன் மனைவியைக் கிணற்றில் தள்ளி, கொலைசெய்துவிட்டு முருகன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அந்தச் சோகம் மறைவதற்குள் இந்தச் சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.