Published:Updated:

குழந்தைகளைக் குளத்தில் வீசிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த தாய்! - நாகை சோகம்

மு.இராகவன்
பா.பிரசன்ன வெங்கடேஷ்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழஉத்தரங்குடியில் தாய் ஒருவர் தனது, 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேவி
தேவி

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழஉத்தரங்குடி கன்னி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் ஜனனி மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை ஜெயமித்திரன். இவர்கள் கீழ உத்திரங்குடியில் ரமேஷின் தாயார் மல்லிகாவுடன் வசித்து வந்தனர்.

தற்கொலை
தற்கொலை

இந்நிலையில், தேவி, வீட்டின் அருகில், அர்ஜுனன் குட்டைக் கரையிலுள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் உயிரிழந்திருந்தார். சேறும் நீருமாக உள்ள குட்டையில் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பொறையாறு காவல்துறையினர், மூன்று பேர் சடலங்களைக் கைப்பற்றி உயிரிழந்த சம்பவம் குறித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுபற்றி விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் பேசினோம். `தேவி குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது பற்றித் தீர விசாரித்து வருகிறோம்.

குழந்தை
குழந்தை

குழந்தைகள் வளர்ப்புக் குறித்து மாமியார் திட்டியதில் மனமுடைந்து குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலைச் செய்துக் கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது'' என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.