Published:Updated:

சென்னை: விவாகரத்து, தனிமை, வறுமை... மகனைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை?!

தற்கொலை! ( மாதிரிப் படம் )

சென்னையில் மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை: விவாகரத்து, தனிமை, வறுமை... மகனைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை?!

சென்னையில் மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Published:Updated:
தற்கொலை! ( மாதிரிப் படம் )

சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் குடியிருந்து வந்தவர் லதா 37. இவர் கணவரைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். லதாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. லதாவின் மகன் தவஞ்ச் குமார் (10). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். இந்தநிலையில் தவஞ்ச்குமார், இன்று அதிகாலை உறவினர்களுக்கு போன் செய்து, தனக்கு உடல் நலம் சரியில்லை. அம்மாவும் அறை கதவை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை என பதற்றத்துடன் கூறினான்.

தற்கொலை செய்து கொண்ட லதா
தற்கொலை செய்து கொண்ட லதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லதாவின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது லதா மயங்கி கிடந்தார். தவஞ்ச்குமார் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி தவஞ்ச்குமாரும் உயிரிழந்தார். இதையடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு லதாவின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

குமார்
குமார்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ நடந்த லதாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தவஞ்ச்குமாருக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு லதாவும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்கிடையில் லதாவின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் லதா, உறவினர்களிடம் பணம் உதவி கேட்ட ஆடியோக்கள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அதனால் வறுமையின் காரணமாக லதா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism