Published:Updated:

பாலியல் வன்கொடுமை வழக்கு; திரும்பப் பெற 50 லட்சம்; பேரம் பேசிய குடும்பத்தினரைச் சிக்கவைத்த முதியவர்!

குற்றம்

பேரம் இறுதியில் 30 லட்ச ரூபாயாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தநிலையில், அந்த முதியவர் ரகசியமாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு; திரும்பப் பெற 50 லட்சம்; பேரம் பேசிய குடும்பத்தினரைச் சிக்கவைத்த முதியவர்!

பேரம் இறுதியில் 30 லட்ச ரூபாயாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தநிலையில், அந்த முதியவர் ரகசியமாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
குற்றம்

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் முதியவர் ஒருவர் வசித்துவந்திருக்கிறார். இவருடன் அந்தப் பகுதியில் வசித்த சிறுமி ஒருவர் பழகியிருக்கிறார். இந்த நிலையில், வசதியாக வாழ்ந்துவந்த முதியவரிடமிருந்து பணம் பறிக்க, சிறுமியின் குடும்பம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தத் திட்டத்தின்படி அந்த முதியவர்மீது மகிளா காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.

மேலும், இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரிப்பதற்கு இடையில் அந்த முதியவரிடம், ரூ.50 லட்சம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுவதாகக் கூறி பேரம் பேசியுள்ளனர். இந்தப் பேரம் இறுதியில் 30 லட்சம் ரூபாயாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த முதியவர் ரகசியமாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள்மீது புகார் அளித்திருக்கிறார். மேலும், குற்றவாளிகளைச் சிக்கவைக்க, சிறுமியின் தாயிடம் பணம் தருவதாக ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்திருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

அந்தச் சிறுமியின் தாயும் சகோதரனும் அந்த ஹோட்டலுக்கு வந்தவுடன் அவர்களிடம் சிறு தொகையை முதியவர் வழங்கியிருக்கிறார். அதே ஹோட்டலில் அப்போது மஃப்டியில் இருந்த காவலர்கள் சிறுமியின் தாயையும் சகோதரனையும் கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், சிறுமியின் தாயிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயைக் காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

குற்றத்துக்கு உதவியாக இருந்த சிறுமியைக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். அந்த முதியவரின் புகாரின் அடிப்படையில் ​​சிறுமியின் தாயார், அவரின் சகோதரர், அவர்களின் கூட்டாளிகள் மீது பொய்ப் பாலியல் வழக்கு பதிவு, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து காவல்துறை விசாரித்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism