Published:Updated:

புதுக்கோட்டை: `யாரும் உன்னைப் பார்த்துக்க மாட்டாங்க!’ - மகனுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்த தாய்

தற்கொலை
தற்கொலை ( Representational image )

தனக்குப் பிறகு மாற்றுத்திறனாளி மகனை யாரும் சரியாகப் பராமரிக்க மாட்டார்கள் என்று நினைத்து, மாற்றுத்திறனாளி மகன் கேசவனுக்கும் பூச்சி மருந்தைக் கொடுத்து, தானும் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள காலாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயியான இவரின் மனைவி அகிலாண்டம். கேசவன் (11) மகேந்திரன் (8) ரோஷி (7) என மூன்று குழந்தைகள். மூத்த மகன் கேசவன் மாற்றுத்திறனாளி. செல்வராஜ் தினமும் மது அருந்திவிட்டு வந்து குடிபோதையில் வீட்டில் பிரச்னையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை

இதனால், செல்வராஜின் மனைவி அகிலாண்டம் தொடர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல் மது அருந்திவிட்டு செல்வராஜ் பிரச்னையில் ஈடுபட, மனமுடைந்த அகிலாண்டம், வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செயதுகொள்ள முடிவெடுத்திருக்கிறார். மற்ற இரண்டு பிள்ளைகளையும் உறவினர்கள் யாராவது பார்த்துக்கொள்வார்கள்.

தனக்குப் பிறகு மாற்றுத்திறனாளி மகனை யாரும் சரியாகப் பரிமாரிக்க மாட்டார்கள் என்று நினைத்து, மாற்றுத்திறனாளி மகன் கேசவனுக்கும் பூச்சி மருந்தைக் கொடுத்து, பூச்சிமருந்தைத் தானும் குடித்து மயங்கி விழுந்தார். இது பற்றி மற்ற பிள்ளைகள் உறவினர்களிடம் கூற, இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

தற்கொலை
தற்கொலை

சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாற்றுத்திறனாளி சிறுவன் கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அகிலாண்டம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அன்னவாசல் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு