Published:Updated:

மாற்று சமூக இளைஞரை காதலித்த மகள் - ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்! - நெல்லை அதிர்ச்சி

கொலைசெய்யப்பட்ட மாணவி அருணா

மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாய், வேறொரு இடத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக இன்று மாப்பிள்ளை வீட்டார் வர இருந்த நிலையில், மகள் எதிர்த்ததால் அவரை தாயே கொலைசெய்துள்ளார்.

மாற்று சமூக இளைஞரை காதலித்த மகள் - ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்! - நெல்லை அதிர்ச்சி

மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாய், வேறொரு இடத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக இன்று மாப்பிள்ளை வீட்டார் வர இருந்த நிலையில், மகள் எதிர்த்ததால் அவரை தாயே கொலைசெய்துள்ளார்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட மாணவி அருணா

நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்மம் காரணமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், பெற்ற மகளை தாயே கொலைசெய்த கொடூரம் நடந்துள்ளது.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

நெல்லையை அடுத்த கீழப்பாலாமடை கிராமத்தைச் சேர்ந்தவர், பேச்சி. சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மனைவி ஆறுமுக கனி, சொந்த ஊரில் வசிக்கிறார். மகள் அருணா, கோவையில் தனியார் நர்ஸிங் கல்லூரியில் படித்து வந்தார். படிக்கும்போது அங்குள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்தவருடன் அருணாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மகளின் காதல் குறித்து அறிந்ததும் அதிர்ச்சியும் கோபமுமடைந்த தாய் ஆறுமுக கனி, மகளை உடனடியாக ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அவருக்கு அவசரமாக கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக அருணாவை பெண் பார்ப்பதற்காக இன்று மாப்பிள்ளை வீட்டார் வர இருந்துள்ளனர். தனக்கு வேறொருவருடன் திருமணம் நடப்பதற்கு அருணா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தன்னை வலுக்கட்டாயமாக வேறொருவருடன் திருமணம் செய்துவைத்தால், திருமணத்துக்குப் பின்னர் தன் காதலனுடன் ஓடிவிடுவதாக எச்சரித்துள்ளார்.

கழுத்து நெறிபட்ட நிலையில் கிடக்கும் அருணா
கழுத்து நெறிபட்ட நிலையில் கிடக்கும் அருணா

திருமண விவகாரம் தொடர்பாக தாய், மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மகள் அருணா தன் முடிவில் உறுதியாக இருந்தது தாய் ஆறும்க கனியை ஆத்திரப்படுத்தியுள்ளது. அதனால் துப்பட்டாவால் மகளின் கழுத்தை இறுக்கியுள்ளார். அதில் நிலைகுலைந்த அருணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகளைக் கொலைசெய்துவிட்டோமே என்கிற பதைபதைப்பு ஆறுமுக கனிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கீழ பாலாமடை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.