Election bannerElection banner
Published:Updated:

கேரளா: `கடவுள் கேட்டதால், பலிகொடுத்தேன்!’ - மகனைக் கொன்று காவலர்களையும் அழைத்த பெண்

கொலை செய்த கேரளா பெண்
கொலை செய்த கேரளா பெண்

`மகனைக் கொலை செய்த ஷகீதாவின் வாட்ஸ்அப் குரூப்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் தீவிர மத நம்பிக்கை உடையவர்கள் மனநிலையை மாற்றி, தூண்டிவிட்டதால் ஷகீதா இது போன்ற செயலில் ஈடுபட்டாரா?’ என்பது குறித்து விசாரிப்பதாக பாலக்காடு போலீஸார் தெரிவித்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புதுப்பள்ளி பூளக்காடு சுலைமான் என்பவரின் மனைவி ஷகீதா (32). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. மேலும், ஷகீதா மூன்று மாத கர்பிணியாக இருக்கிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த தனது மூன்றாவது குழந்தையான ஆறு வயதான அமில் இஹ்ஸானை கழிவறைக்குக் கொண்டு சென்று, கால்களைக் கட்டி கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

பின்னர் காவல் நிலையத்துக்கு போன் செய்து குழந்தையைக் கொலை செய்ததாகத் தகவல் கூறினார். போலீஸார் அங்கு சென்றபோது கதவைத் திறந்து, கொலை செய்யப்பட்ட குழந்தையைக் காட்டினார். அதேசமயம், ஷகீதாவின் கணவரும் இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். பாலக்காடு சவுத் போலீஸார் சென்றுதான் ஷகீதாவின் கணவர் சுலைமானை எழுப்பி குழந்தை கொலை செய்யப்பட்ட விவரத்தைத் தெரிவித்தனர். அப்போதுதான் சுலைமானுக்கும் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷகீதா கைதுசெய்யப்பட்டார்.

கொலைச் செய்யப்பட்ட 6 வயது சிறுவன் அமில் இஹ்ஸான்
கொலைச் செய்யப்பட்ட 6 வயது சிறுவன் அமில் இஹ்ஸான்

கடவுள் கேட்டதால் குழந்தையை பலி கொடுத்ததாக ஷகீதா வாக்குமூலம் கொடுத்து போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கொலை செய்யப்பட்ட அமில் இஹ்ஸான் கள்ளிக்காடு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறுகையில், ``கடவுள் தன்னிடம் கேட்டுக்கொண்டதால் குழந்தையை பலி கொடுத்ததாக ஷகீதா கூறியிருக்கிறார். அதேசமயம், வீட்டில் சமையல் செய்ய கத்தி இல்லை, எனவே கத்தி வாங்கி வரும்படி கொலை செய்வதற்கு முன்தினம் கணவரிடம் கூறியிருக்கிறார்.

80 வயது மனைவியைக் குத்திக் கொலை செய்து எரித்த 84 வயது கணவர்! - மும்பை பயங்கரம்

கணவர் வாங்கி வந்த புதிய கத்தியைவைத்து மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். முன்னதாக துணியால் சிறுவனின் கால்களைச் சேர்த்துக் கட்டியிருக்கிறார் ஷகீதா. அதுமட்டுமல்லாமல், இரண்டு நாள்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலக்காடு போலீஸின் தொடர்பு எண்ணை வாங்கிவைத்திருக்கிறார். ஜன மைத்ரி போலீஸ் (மக்கள் இணக்க காவல்துறை) அவசர எண் 112 என்ற எண்ணுக்குக் குழந்தையைக் கொலை செய்த விவரத்தைக் கூறியதை அடுத்தே அங்கு சென்று விசாரணை நடத்தினோம்.

மகனைக் கொலை செய்த ஷகீதா
மகனைக் கொலை செய்த ஷகீதா

கொரோனா லாக்டெளன் சமயத்தில் ஷகீதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்துவந்திருக்கிறார். இப்போது பார்சல் வாகனம் ஓட்டும் பணி செய்துவருகிறார். ஷகீதா லாக்டெளனுக்கு முன்பு வரை பூளக்காடு மதரசா-வில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். மேலும் ஷகீதாவின் வாட்ஸ்அப் குரூப்கள் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். அதில் தீவிர மத நம்பிக்கை உடையவர்கள், மனநிலையை மாற்றித் தூண்டிவிட்டதால் ஷகீதா இது போன்ற செயலில் ஈடுபட்டாரா என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு