Published:Updated:

காதலனின் பெற்றோர் சரமாரிப் புகார் - தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் தாயார் திடீர் மாயம்?!

தாயாருடன் துனிஷா

மும்பையில் தற்கொலை செய்துகொண்ட டி.வி நடிகையின் தாயார் திடீரெனக் காணாமல் போய்விட்டார்.

காதலனின் பெற்றோர் சரமாரிப் புகார் - தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் தாயார் திடீர் மாயம்?!

மும்பையில் தற்கொலை செய்துகொண்ட டி.வி நடிகையின் தாயார் திடீரெனக் காணாமல் போய்விட்டார்.

Published:Updated:
தாயாருடன் துனிஷா

மும்பை வசாய் பகுதியிலுள்ள காமன் ஸ்டூடியோவில் டி.வி நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பின் இடைவெளியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த மாதம் 24-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் காதலன் ஷீஸன் கான் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஷீஸன் கான் நடிகை துனிஷாவுடனான நட்பைத் துண்டித்துக்கொண்டதால்தான் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வசாய் வாலிவ் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஷீஸன் பெற்றோர் இரண்டு நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், `தற்கொலைக்குத் தங்களின் மகன் காரணம் கிடையாது’ என்றும், `துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மாதான் காரணம்’ என்றும் குற்றம்சாட்டினர். துனிஷாவின் தாயார், அவரின் மகளைப் பணத்துக்காக நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.

இது குறித்து வனிதா ஷர்மாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக அவரின் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ஆனால், அவரின் வீடு பூட்டிக்கிடந்தது. அவர் முந்தைய நாளே தனது வீட்டில் இருந்த பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றிருந்தார்.

காதலனின் பெற்றோர் சரமாரிப் புகார் - தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் தாயார் திடீர் மாயம்?!

லாரியில் அனைத்துப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு சென்றதாக வனிதா வசிக்கும் கட்டட வாட்ச்மேன் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமி போர்கர் இது குறித்துக் கூறுகையில், ``வனிதாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக நாங்கள் சென்றோம். ஆனால், அவரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அதோடு வீடே காலிசெய்யப்பட்டிருந்தது. வனிதாவின் மொபைல் போனும் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சண்டிகரில் தன்னுடைய மகளின் ஆத்மா சாந்திக்காக பூஜை செய்ய வனிதா திட்டமிட்டிருக்கிறார். அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று நினைக்கிறோம். அவரின் வாக்குமூலம் இந்த வழக்கில் மிகவும் முக்கியம். எனவே, அவரை தேடிக் கண்டுபிடிக்க எங்களது தனிப்படை சண்டிகர் செல்லவிருக்கிறது” என்று தெரிவித்தார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், `துனிஷா தன்னுடைய காதலன் ஷீஸன் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். ஷீஸன் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் அனைத்தையும் தெரிவித்திருந்தார். துனிஷா மேற்கொண்டு நடிக்க விரும்பியதில்லை. ஆனால், அவரின் தாயார் தொடர்ந்து நடிக்கும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் தாய், மகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. தன்னுடைய தாயாரின் செயலால் துனிஷா மிகவும் விரக்தியில் இருந்தார். அவரின் தாயாரிடமிருந்து துனிஷாவுக்கு அன்பு கிடைக்கவில்லை. ஆனால், ஷீஸன் குடும்பம் துனிஷாவுக்கு அனைத்தையும் கொடுத்து அவரின் கனவுகளையும் நிறைவேற்றியது. ஷீஸன் துனிஷாவுக்கு இரண்டு நாய்களையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார்’ என்று தெரியவந்திருக்கிறது.

காதலனின் பெற்றோர் சரமாரிப் புகார் - தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் தாயார் திடீர் மாயம்?!

இந்தத் தகவல்களை ஷீஸன், போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். துனிஷா தற்கொலைக்கு முன்பு தனது காதலனுடன் பிரேக்அப் ஆனது குறித்து அலி என்பவரைச் சந்தித்து தெரிவித்திருக்கிறார். அவரையும் போலீஸார் அழைத்து வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். அதோடு ஷீஸன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்த பெண்ணையும் அழைத்து வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். இரண்டு பேரும் வாட்ஸ்அப் சாட்டிங்கை டெலிட் செய்துவிட்டனர். இதனால், அவர்களது போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஷீஸன் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதோடு ஷீஸன் டி.வி சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவரின் முடியை வெட்ட வேண்டாம் என்று கோர்ட்டில் ஷீஸன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை கோர்ட் ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. துனிஷாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒருவகையான அதிர்ச்சி தொடர்பான நோய் இருந்துவந்தது தெரியவந்தது. இதற்காகச் சமீபத்தில்கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.