Published:Updated:

சீர்காழி: கந்துவட்டி புகார்; ரூ.1 கோடி மதிப்புள்ள கிரைய பத்திரங்கள் பறிமுதல் - தாய், மகன் கைது!

தாய், மகன் கைது

சீர்காழி அருகே கந்துவட்டி புகார் எதிரொலியால், ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்திய போலீஸார் ரூ.1 கோடி மதிப்புள்ள கிரைய பத்திரங்களைப் பறிமுதல் செய்ததோடு தாய், மகன்  இருவரையும் கைதுசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீர்காழி: கந்துவட்டி புகார்; ரூ.1 கோடி மதிப்புள்ள கிரைய பத்திரங்கள் பறிமுதல் - தாய், மகன் கைது!

சீர்காழி அருகே கந்துவட்டி புகார் எதிரொலியால், ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்திய போலீஸார் ரூ.1 கோடி மதிப்புள்ள கிரைய பத்திரங்களைப் பறிமுதல் செய்ததோடு தாய், மகன்  இருவரையும் கைதுசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தாய், மகன் கைது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மெடிக்கல் ஷாப்  நடத்திவருகிறார். இவர் வழுதலைகுடியைச் சேர்ந்த சோலையம்மாள், அவரின் மகன் ஜெயவீரபாண்டி ஆகிய இருவரிடமும் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் பெற்றதற்காக, வீட்டை அடமானமாக கிரைய பத்திரப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.

தாய் ,மகன் கைது
தாய் ,மகன் கைது

இந்நிலையில் வாசுதேவன் அசல், வட்டி என 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், அதையும் மீறி ரூ.7 லட்சம் கொடுத்தால்தான் பத்திரப்பதிவை ரத்துசெய்து தருவேன் என சோலையம்மாள், ஜெயவீரபாண்டி இருவரும் கூறியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீஸார்  சோலையம்மாள் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.

தாய், மகன் கைது
தாய், மகன் கைது

தொடர்ந்து அவரின் வீட்டைச் சோதனை செய்வதற்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சோலையம்மாள் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பலருக்குக் கடன் கொடுத்த வகையில் அடமானமாகக் கிரையம் பெற்ற 30 பத்திரங்கள், வெறும் கையெழுத்து மட்டும் பெற்ற 11 பத்திரங்கள் என ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கந்துவட்டி வழக்கில் சோலையம்மாள், மகன் ஜெயவீரபாண்டி இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.