Published:Updated:

``அவர் இல்லாத உலகத்தில், எங்களால் வாழ முடியாது..!" - கணவர் பிரிவால் விபரீத முடிவெடுத்த குடும்பம்

சிதம்பரம்-சுபா

சாத்தூரில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் அவரின் 30-வது நினைவு நாளில் தாய், மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

``அவர் இல்லாத உலகத்தில், எங்களால் வாழ முடியாது..!" - கணவர் பிரிவால் விபரீத முடிவெடுத்த குடும்பம்

சாத்தூரில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் அவரின் 30-வது நினைவு நாளில் தாய், மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

Published:Updated:
சிதம்பரம்-சுபா

சாத்தூரில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் அவரின் 30-வது நினைவு நாளில் தாய், மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்போது, ``விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிதம்பர நகரைச் சேர்ந்தவர் சிதம்பரம். சாத்தூரில் தனியார் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி சுபா. சிதம்பரம்-சுதா தம்பதியினருக்கு இரட்டையர்கள் மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் முரளிபாரதி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வங்கிப் பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு சிதம்பரம், வீட்டிலிருக்க விருப்பமில்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக நண்பரின் ஹோட்டலில் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30 நாள்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிதம்பரம் உயிரிழந்தார். இது அவரின், மனைவி, மகனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் திடீர் பிரிவை தாங்கமுடியாத சுபாவும், முரளி பாரதியும் கடந்த ஒரு மாதகாலமாக மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முரளி பாரதி
முரளி பாரதி

இந்த நிலையில், கணவரின் 30-வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்கமுடியாமல் தாய்-மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். வழக்கமாக, அக்கம் பக்கத்தினருடன்‌ பெரிதாக பழக்கமில்லாமல் பூட்டிய வீட்டுக்குள்ளிருக்கும் சிதம்பரத்தின் வீட்டில், இன்று பகலில், வெகுநேரமாக வீட்டுக்கதவு திறந்தே கிடந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிதம்பரத்தின்‌ வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சுபா, முரளிபாரதி இருவரும் மூச்சுப்பேச்சில்லாமல் கிடந்துள்ளனர்‌. இதையடுத்து பதற்றமடைந்த அவர்கள், இது குறித்து சாத்தூர் டவுன் போலீஸூக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார், சுபா, முரளிபாரதியை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து சுபா, முரளி பாரதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டன.

இதற்கிடையில், வீட்டில் சோதனை நடத்தியபோது, தற்கொலை குறித்து தாய்-மகன் இருவரும் தங்கள் கைப்பட தனித்தனியே லெட்டர் எழுதி வைத்திருந்ததை கைப்பற்றினோம். அந்த லெட்டரில், `எங்களின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை.. அவர் (சிதம்பரம்) இல்லாத உலகத்தில், எங்களால் வாழ முடியாது.. எனவே அவரை தேடிச்செல்கிறோம்' என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனக் கூறினர்.