Published:Updated:

தொடர்ந்த காதல்... சர்ச்சில் தற்கொலை செய்துகொண்ட தாய் - காரில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு

தற்கொலை செய்துகொண்ட ஆரோக்கிய சூசைநாதன்

குழந்தைகளை காரில் தூங்கவைத்துவிட்டு, தென்னை மரத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிமருந்தைக் குடித்து ஆரோக்கிய சூசைநாதனும், ஷாமினியும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தொடர்ந்த காதல்... சர்ச்சில் தற்கொலை செய்துகொண்ட தாய் - காரில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு

குழந்தைகளை காரில் தூங்கவைத்துவிட்டு, தென்னை மரத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிமருந்தைக் குடித்து ஆரோக்கிய சூசைநாதனும், ஷாமினியும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
தற்கொலை செய்துகொண்ட ஆரோக்கிய சூசைநாதன்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாமினி (29). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (36) என்பவரும் முன்பு காதலித்துவந்தனர். இந்த நிலையில் ஷாமினிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஷாமினிக்கு 7, 3 வயதுள்ள இரண்டு மகன்கள் உள்ளனர். ஆரோக்கிய சூசைநாதனுக்கும், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்திருக்கிறது.

ஷாமினி, சூசைநாதன் இருவரும் வேறு திருமணம் செய்துகொண்டாலும் அடிக்கடி தனியாகச் சந்தித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர்களது தொடர்பு சூசைநாதனின் மனைவிக்குத் தெரியவந்ததால், அவர் கணவனைப் பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்துவருகிறார்.

தற்கொலை செய்துகொண்ட ஷாமினி - ஆரோக்கிய சூசைநாதன்
தற்கொலை செய்துகொண்ட ஷாமினி - ஆரோக்கிய சூசைநாதன்

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி ஷாமினி தனது இரண்டு குழந்தைகளுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். மனைவி திடீரென மாயமானதாக அவரின் கணவர் ராஜேஷ் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் அருகேயுள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுன்ட் பகுதியில் ஆணும் பெண்ணும் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீஸுக்குத் தகவல் சென்றிருக்கிறது.

போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தது காணாமல்போன ஷாமினியும், அவரின் முன்னாள் காதலன் சூசைநாதனும் எனத் தெரியவந்தது. இவர்கள் இறந்துகிடந்த இடத்துக்கு அருகே டாடா சுமோ வாகனம் நின்றதைப் பார்த்த போலீஸார் கதவைத் திறந்து பார்த்தனர். அங்கு ஷாமினியின் இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். காரிலிருந்து குழந்தைகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

காரில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்
காரில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்

சூசைநாதன் வாடகை கார் ஓட்டிவருகிறார். ஷாமினியும் சூசைநாதனும் தங்கள் தொடர்பை விட முடியாமல் தவித்துவந்த நிலையில் நேற்று தேவசகாயம் மவுன்ட் சர்ச் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர், குழந்தைகளை காரில் தூங்கவைத்துவிட்டு தென்னை மரத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.