Published:Updated:

மாயமான மூதாட்டி... ஆற்றில் மிதந்த உடல் உறுப்புகள்! - போலீஸில் தந்தை, மகன் சிக்கியது எப்படி?

கொலை ( சித்திரிப்புப் படம் )

புனேயில் வீட்டைவிட்டு வெளியேறும்படி சொன்ன தாயை தன் மகனுடன் சேர்ந்து கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

மாயமான மூதாட்டி... ஆற்றில் மிதந்த உடல் உறுப்புகள்! - போலீஸில் தந்தை, மகன் சிக்கியது எப்படி?

புனேயில் வீட்டைவிட்டு வெளியேறும்படி சொன்ன தாயை தன் மகனுடன் சேர்ந்து கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை ( சித்திரிப்புப் படம் )

புனேவில் வசித்த உஷா கெய்க்வாட் (62) என்ற மூதாட்டி கடந்த மாதம் 5-ம் தேதி திடீரென காணாமல்போனார். இது தொடர்பாக அந்த மூதாட்டியின் மகன் சந்திப் கெய்க்வாட், பேரன் சாஹில் ஆகியோர் புனே முத்வா போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். விசாரணையில் எந்தவிதத் துப்பும் துலங்காமல் இருந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியின் மகள் சீத்தல் காம்ப்ளே தன் தாயார் காணாமல்போனதில் சந்திப், அவருடைய மகன் சாஹிலுக்குத் தொடர்பிருக்கும் என்று சந்தேகிப்பதாக போலீஸில் தெரிவித்திருந்தார். உடனே போலீஸார் சந்தீப், சாஹில் இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும்தான் உஷாவைக் கொலைசெய்தனர் என்று தெரியவந்தது. உஷா தன் மகன், பேரனை வீட்டைவிட்டு வெளியேறும்படியும், தன்னுடைய தங்க நகைகளைக் கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்.

கொலை
கொலை

இதனால் ஆத்திரத்தில் சந்திப்பும், அவர் மகன் சாஹிலும் சேர்ந்து உஷாவைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர். பின்னர் சாட்சியங்களை அழிப்பதற்காக எலெக்ட்ரிக் கட்டர் மெஷினை வாங்கிவந்து உஷாவின் உடலைப் பல துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் வைத்து ஆற்றில் தூக்கிப்போட்டிருக்கின்றனர்.

கைது
கைது

ஆகஸ்ட் 23-ம் தேதி புனே முத்தா ஆற்றில் உடல் உறுப்புகள் மிதந்து வந்தன. அவற்றைக் கைப்பற்றி போலீஸார் தனியாக விசாரித்துவந்தனர். அந்த உடல் உறுப்புகள் உஷாவின் உடல் உறுப்புகள் என்று தெரியவந்தது. இதையடுத்து தகப்பன், மகன் இரண்டு பேரையும் கைதுசெய்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.